நைஜீரியா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தி்ல் பெட்ரால் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் பலியாயினர்,
இது குறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த அதிகாரி யூசுவா சுவாய்ப் கூறுகையில்; தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த சாலை விபத்திற்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்தெரிவித்தார்.