30 ஏக்கர் இறால் பண்ணை: நோ எவ்வளவு கொடுத்தார்?

முதலில் நிலத்தை மலிவாக பெறுங்கள். அடுத்து அந்த நிலத்தை மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடுங்கள். இது தான் அலிபாபா பாணி.”

நோ-வின் 30 ஏக்கர் இறால் பண்ணை நிலம் மீது ஏதோ குளறுபடி

மியோப்101: எது எப்படி இருந்தாலும் விவசாய அமைச்சர் அந்த நிலத்தை 1995ம் ஆண்டு வாங்கியுள்ளார். மாநில அரசாங்கம் பதிவேடுகளைப் புரட்டிப் பார்த்து அந்த நிலம் கழிவு விலைக்கு வாங்கப்பட்டதா அல்லது அப்போதைய மதிப்புக்கு ஈடாக வாங்கப்பட்டதா என்பதை கண்டு பிடிக்க முடியும்.

அந்த நிலம் அதிகமான கழிவுத் தொகையுடன் வாங்கப்பட்டிருந்தால் அது எப்படிக் கிடைத்தது என்பதை நீங்கள்  நோ ஒமாரிடம் கேட்கலாம்.

கொசு: செக்கிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் அவர்களே, நில உரிமையாளர் தமது நிலத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஒப்பந்தம் செய்து கொள்வதில் என்ன தவறு ?.

நான் மியோப் 101 சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். அந்த நிலம் 1995ல் சந்தை விலைக்குக் குறைவாக வாங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் இன்னும் காட்டவில்லை. அப்போது சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் எம்பி-யாகக் கூட இல்லை. நீங்கள் சொல்ல வருவது சரியாகத் தெரியவில்லை.

வீரா: முதலில் நிலத்தை மலிவாக பெறுங்கள். அடுத்து அந்த நிலத்தை மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடுங்கள். இது தான் அலிபாபா பாணி.

அந்த நிலத்தை அவர் நேரடியாக பயன்படுத்தாத போது அவருக்கு ஏன் அந்த நிலம் கொடுக்கப்பட்டது ? அவர் அப்போது அம்னோ ஜமீன்தாரராக இருந்ததுதான் காரணமா ?

அடையாளம் இல்லாதவன்#47094963: இன்னொரு கேள்வி. அறிவிக்கப்பட்ட அவரது வருமானம் செலுத்திய வரி ஆகியவற்றை பரிசீலித்தால் அந்த நிலத்தை வாங்கும் சக்தி அவருக்கு இருந்ததா என்பது தெரிந்து விடும்.

கோலாப்பிலா: நான் சிலாங்கூரில் வாழ்கிறேன். இரண்டு மாடி வரிசை வீடு ஒன்றுடன் வந்த சிறிய நிலம்தான் எனக்குச் சொந்தமானது.

நான் ‘கஷ்டப்பட்டு சம்பாதித்த’ பணத்தில் அந்த வீடு வாங்கப்பட்டது. தொடக்கப் பள்ளியை முடித்த ஒருவருக்கு 30 ஏக்கர் நிலம் கிடைத்தது என எண்ணும் போது….

பிளைண்ட் பிரடோ: பெருமக்கள் நல்ல யோசனைகளைப் பற்றிப் பேசுவார்கள். சராசரி மக்கள் விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சிறிய மனிதர்கள் மற்றவர்களைப் பற்றிப் பேசுவார்கள்.. என முதுமொழி ஒன்று உண்டு.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலான மக்கள் மற்றவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். விஷயங்களைப் பற்றி மிகவும் சிறிதளவே பேசப்படுகின்றது. பெரும்பாலும் அவை இலக்கு இல்லாதவை. யோசனைகள் பற்றி யாரும் பேசுவதே இல்லை.

மாற்றம்: பிளைண்ட் பிரடோ உங்கள் எண்ணம் இதுவா ? அம்பாங் எல்ஆர்டி, என்எப்சி. எம்ஏஎஸ், PKFZ, அல்தான் துயாஷாரிபு, தியோ பெங் ஹாக் ஏ குகன் பற்றி பேசக் கூடாது என்கிறீர்களா ? யோசனைகளை பற்றி மட்டும் தான் பேச வேண்டுமா ?

கிட் பி : சிலாங்கூர் மந்திரி புசாராக நியமனம் பெறுவதற்கு வாய்ப்புள்ள பிஎன் வேட்பாளர், அந்த இடத்தில் அமருவதற்கு முன்னரே அவர்  மோசடிக்காரர் என கூறப்பட்டுள்ளது. நான் மந்திரி புசார் காலித் இப்ராஹிமையே ஆதரிக்கிறேன் . 

மலேசிய இனம்: பழைய பழமொழிக்கு இப்படி ஒரு திருத்தம் செய்ய வேண்டும்… “Ada udang di sebalik batu, ada Noh di sebalik udang.”

TAGS: