உத்துசான், ஒரு விஷயத்தைத் திரிப்பது என்பது பொய் சொல்வதற்கு ஒப்பாகும்

“அப்பட்டமான பொய்களுக்கும் ஏமாற்றுவதற்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உள்ளது. அந்தக் கறை படிந்த பத்திரிக்கை அங்கீகரிப்பது அப்பட்டமான பொய்களே தவிர வேறு ஒன்றுமில்லை.”

உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியானதே

குரல்: ஒரு விஷயம் அப்பட்டமான பொய்யாக மாற்றுவதற்கு அதனை திரிக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு விஷயம் விஷயம்தான். பொய் பொய்தான்.

அது உத்துசான் மலேசியா துணைத் தலைமை ஆசிரியர் முகமட் ஜைனி ஹசான் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது. நாங்கள் உண்மைகளையே திரித்து வெளியிடுகிறோம் எனக் கூறுவதற்கு அவருக்குத் துணிச்சல் இல்லை.

ஹாங் பாயூப்: “நாங்கள் திரிக்கிறோம்” என்றால் “நாங்கள் தில்லுமுல்லு செய்கிறோம்” என அர்த்தம். அதனை இப்படியும் சொல்லலாம்: “எங்கள் வாசகர்களே நீங்கள் எங்கள் பிடியில். எங்கள் பத்திரிக்கை வழியாக நாங்கள் மலாய் மக்கள் அனைவரையும் அவமதிக்கிறோம்.”

ஒரு பத்திரிக்கை நடத்தப்படுவதற்கான அடிப்படை அது அல்ல. அந்தப் பத்திரிக்கைக்கு சொந்தக்காரரான அரசியல் கட்சியும் அப்படிச் செய்யக் கூடாது. அது வெற்றியைத் தராது.

எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் அரசாங்கத் தலைவரும் நிலைத்திருப்பதற்கும் அது வழி அல்ல.  அரசியல் ரீதியில் ஏமாற்றம் அடைந்தவர்களே அவ்வாறு செய்வர்.

பல இனம்: தரம் குறைந்த இதழியல் முறையை தாங்கள் பின்பற்றுவதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. பணத்துக்காக அவர்கள் அதனைச் செய்கின்றனர். எதிர்க்கட்சிகளை அவர்கள் எதிரிகளாகப் பார்க்கின்றனர். எதிர்க்கட்சிகளை மோசமாகக் காட்டுவதற்கு அவர்கள் கதையைத் திரிப்பார்கள். திசை திருப்புவார்கள்.

பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றினால் நாம் அவர்கள் அனைவரையும் விரட்ட வேண்டும். அவர்கள் செய்தி- நிறுவனங்களை நடத்துவதற்கு அருகதையற்றவர்கள். சுதந்திரமான ஊடகத் துறையை நாம் உருவாக்க வேண்டும்.

கறுப்பு மம்பா: உத்துசன் “ஒரு காலத்தில் வாசிப்பதற்கு நல்ல மலாய் ஏடாக”த் திகழ்ந்தது. அரசாங்கத்தை விமர்சனம் செய்தது.

ஆனால் அம்னோ அதனை வாங்கிய பின்னர் அது மாறி விட்டது. அது இப்போது செய்திகளைத் திரிப்பதில் வல்லமை உடைய பத்திரிக்கையாகி விட்டது. அதற்காக அந்த ஏட்டுக்கு விருது கூடக் கொடுக்கலாம். அதனை ஏற்கன்வே செய்திருக்க வேண்டும்.

எஸ்எம்சி77: ‘திரித்தல்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பது உங்களுக்குத் தெரியுமா ஜைனி அவர்களே ? நீங்கள் ஒரு விஷயத்தைத் திரித்தால் அது விஷயமல்ல. ஆகவே நீங்கள் அப்பட்டமான பொய்யைச் சொல்கின்றீர்கள். உத்துசான் எல்லா நேரத்திலும் பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

மூன் டைம்: அப்பட்டமான பொய்களுக்கும் ஏமாற்றுவதற்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உள்ளது. அந்தக் கறை படிந்த பத்திரிக்கை அங்கீகரிப்பது அப்பட்டமான பொய்களே தவிர வேறு ஒன்றுமில்லை.

உத்துசான் பல கடைகளில் விற்கப்படாமல் இருப்பதை நான் பார்த்துள்ளேன். அதன் பொய்களையும்   ஆகும் கட்சியினருக்கு ஆதரவான அப்பட்டமான முகத்துதியும் விஷயங்களைத் திரிப்பதையும் மலேசியர்கள் முற்றாக நிராகரித்து விட்டனர் என்பதே அதற்கு அர்த்தமாகும்.

உத்துசானுடைய அவதூறுகளுக்கும் பொய்களுக்கும் பலியானவர்கள் அவதூறு வழக்குப் போட வேண்டும். இறுதியில் அது திவாலாகி விடுவதை வேறு வழி இல்லாமல் செய்ய வேண்டும்.

ஜெரோனிமோ: நீங்கள் விஷயங்களைத் திரிக்கவில்லை. பொது மக்களிடம் பொய் சொல்வதற்காக நீங்கள் கதைகளை ஜோடிக்கின்றீர்கள்.

இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது. உத்துசான் நாளேடு அல்ல. அது அம்னோவுக்கு பிரச்சார ஏடாகும்.

ஹாஸ்ருல் ஜுனாய்டி: தாங்கள் விஷயங்களைத் திரிப்பதை ஒப்புக் கொண்ட ஜைனி நான் பாராட்டுகின்றேன். உள்நாட்டு ஊடகங்களில் பணியாற்றும் எத்தனை பேர் அதனை ஒப்புக் கொள்வார்கள் ?

 

TAGS: