உங்கள் கருத்து: விவசாய அமைச்சர் + இறால் பண்ணை = சுய நலன்

“ஆகவே நீதிபதி ஒருவர் சொந்தமாக வழக்குரைஞர் தொழில் செய்யலாம். சுற்றுப்பயண அமைச்சர் சுற்றுலா நிறுவனத்தை நடத்தலாம். நிதி அமைச்சர் சொந்தமாக வங்கி வைத்திருக்கலாம்.”

இறால் பண்ணையில் பங்கு இருப்பதை நோ ஒமார் ஒப்புக் கொண்டார்

உங்கள் அடிச்சுவட்டில்: விவசாய, விவசாய அடிப்படை தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் அவர்களே,  அமைச்சர் ஒருவர் தீவிரமாக வர்த்தகத்தில் ஈடுபடலாமா என்பதை முதலில் சோதனை செய்யுங்கள்.

நீங்கள் அமைச்சராக நியமனம் பெற்றதும் உங்கள் தொழில்களை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்திருக்கலாமே ?

இறால் பண்ணை தவிர வேறு எந்தத் தொழிலும் உங்கள் உண்டா ? எடுத்துக் காட்டுக்கு- டாக்ஸி நிறுவனங்கள், உர விநியோகம், மண் சுரங்க நடவடிக்கை, நெல் விவசாயம், வர்த்தகம்.

என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு அவசியம் தெரிய வேண்டும். இது போன்ற உப்புச்சப்பில்லாத வாதங்களை முன் வைக்க வேண்டாம்.

ஹலோ: இறால் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நோ ஒமார் விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது முக்கியமல்ல. நிச்சயம் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் ஒரு பகுதியான  Agro Bank-கிடமிருந்து அந்தத் தொழிலுக்குக் கடன் பெறப்பட்டுள்ளது வெளிச்சமாகியுள்ளது.

நோ ஒமார் அவர்களே அதனை எப்படி விளக்கப் போகின்றீர்கள் ? அந்தக் கடனை அங்கீகரித்த குழுவில் நீங்கள் இருக்கின்றீர்களா ? மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எங்கே போனது ?

அடையாளம் இல்லாதவன்235: வீடமைப்பு அமைச்சர் வீடு வாங்கக் கூடாதா ? அதுவும் சுய நலன் சம்பந்தப்பட்டதா ? ஆனால் அவர் தனிப்பட்ட முறையிலோ அல்லது பேராளர் மூலமாகவோ வீடமைப்பாளராக மாறி அதிலிருந்து ஆதாயம் அடைந்தால் கதையே வேறு.

முஷிரோ: இறால் பண்ணைத் தொழில் விவசாய அமைச்சர் ஈடுபடுவது தவறு இல்லை என்றால் அதனை முன்பே ஒப்புக் கொண்டிருக்கலாமே ?

அந்தத் தொழிலுக்கு விவசாய அமைச்சு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

1குளோக்கல்: “அந்த நிலம் எனக்குத் தனிப்பட்ட முறையில் சொந்தமானது அல்ல” என அவர் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சொந்தக்காரராகப் பதிவு  செய்யப்பட்டுள்ளார்.

மாற்றம்: நீங்கள் உங்கள் சொத்துக்களை பொது மக்களுக்கு அறிவிக்கவில்லை என்பதும் 2009ம் ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்ற போது உங்கள் தொழிலைக் கைவிடவில்லை என்பதுமே உண்மை.

ரிக் தியோ: ஆகவே நீதிபதி ஒருவர் சொந்தமாக வழக்குரைஞர் தொழில் செய்யலாம். சுற்றுப்பயண அமைச்சர் சுற்றுலா நிறுவனத்தை நடத்தலாம். நிதி அமைச்சர் சொந்தமாக வங்கி வைத்திருக்கலாம்.

நிச்சயமாக வீடமைப்பு அமைச்சர் வீடுகளை வாங்கலாம். ஆனால் வீடமைப்புத் தொழிலில் ஈடுபடக் கூடாது. காரணம் சுயநலன் சம்பந்தப்பட்டுள்ளது.

பல இனம்: என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் இவ்வாறு கூறினார்: “எந்த அம்னோ தலைவருக்கு பிரச்னை இல்லை என்பதை எனக்குச் சொல்லுங்கள்”.

இந்த விஷயத்தில் ஷாரிஸாட் மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார்.

அடையாளம் இல்லாதவன் #00470101: இன்னும் மாட்டு ஊழல் (Cow-gate) விவகாரம்  முடியவில்லை. இப்போது இறால் ஊழல் (Udang-gate) விவகாரம் முளைத்துள்ளது.

 

 

 

TAGS: