சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகிறார்கள். இந்த வன்முறை சாவுகளை தடுக்க முக்கிய நகரங்களில் இருந்து ராணுவத்தை வாயஸ் பெற்று போர் நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு வன்முறை ஓயவில்லை.
இதனை அடுத்து புதிய நடவடிக்கையாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்க கோரும் தீர்மானத்தை, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தில் சிரியாவில் உள்ள நகரங்களில் இருந்து ராணுவத்தை 10 நாட்களுக்கு வாபஸ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. ஆனால் இத்தீர்மானத்தை ஆசாத்தின் ஆதரவாளரான ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எதிர்க்கும் என தெரிகிறது. மாற்று தீர்மானம் ஒன்றை ரஷியா கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.