‘சபாஷ் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளது’

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக சபாஷ் தெரிவித்துள்ள யோசனை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் மருட்டல் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யான டோனி புவா கூறுகிறார்.

“தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வேளையில் நீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக அந்த மூன்று பகுதிகளிலும் உள்ள ஏழு மில்லியன் பயனீட்டாளர்களை மருட்டுவதின் மூலம் சபாஷ், நமது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாகி விட்டது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

தண்ணீர் அளவு குறைவாக இருப்பதாக அந்த நிறுவனம் வலியுறுத்தும் வேளையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூ-வும் சேவியர் ஜெயகுமாரும் மாநிலத்தில்  உள்ள ஏழு நீர் தேக்கங்களையும் பார்வையிட்டு அவற்றில் தண்ணீர் முழு அளவுக்கு இருப்பதாகவும் சுத்திகரிக்கப்படாத தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை என்றும் கூறியுள்ளதாக புவா மேலும் சொன்னார்.

TAGS: