வரலாற்று மலாக்கா மாநகராட்சி மன்றம் கடந்த ஏப்ரல் 28 இல் பெர்சே 3.0 டாத்தாரான் பலவான் மெகாமாலில் நடத்திய பேரணியால் அம்மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக மசீச வனித்தா தலைவர் கியன் சிட் ஹார் மீது வழக்குத்தொடுத்துள்ளது. இன்று மலாக்கா செசன்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 15 இல் கேட்கப்படும் என்று நிர்ணயித்தது.
ஒரு வழக்குரைஞரை நியமிக்கவும், தற்காப்புவாத அறிக்கையைத் தயாரிக்கவும் தமக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்று கியன் கேட்டுகொண்டதற்கிணங்க நீதிபதி அபு பாகார் காதார் இத்தேதியை நிர்ணயித்தார்.

























