மே 13ஐ முஹைடின் உண்மையிலேயே தவிர்க்க விரும்புகிறாரா? லிம் கிட் சியாங்

எம்பி பேசுகிறார்: அடுத்த பொதுத் தேர்தலில் என்ன விலை கொடுத்தாவது அம்னோ/பாரிசான் நேசனல் ஆட்சியை நிலைத்திருக்க செய்வதற்கு அச்சத்தையும் இனத்தையும் பயன்படுத்தும் தரம் குறைந்த, பொறுப்பற்ற ஈவிரக்கமற்ற அவமதிப்பைத் தரக் கூடிய இரட்டை அரசியலில் ஈடுபடவில்லை என்பதையும் மே 13 மீண்டும் நிகழாமல் தடுக்க விரும்புவதாக கூறியுள்ளதையும் நிரூபித்து தாம் பொறுப்புள்ள அரசியல் தலைவர், மலேசியத் தேசியவாதி எனக் காட்டுமாறு நான் துணைப் பிரதமர் முஹைடின் யாசினுக்குச் சவால் விடுக்கிறேன்.

இந்த நாட்டு நிலைத்தன்மையுடன் அமைதியாக இருப்பதை உறுதி செய்வதற்கும் 1969ம் ஆண்டு மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் இலைய தலைமுறையினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாட்டில் முஹைடின் கேட்டுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் மே 13 மீண்டும் நிகழ்வதைக் காண விரும்பவில்லை,” என முஹைடின் அந்த மாநாட்டில் பிரகடனம் செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

டிஏபி பக்காத்தான் ராக்யாட் சார்பில் நான் மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழ்வதைக் காண டிஏபி-யிலும் பக்காத்தானிலும் உள்ள நாங்கள் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்து கொள்கிறோம். அத்தகைய சம்பவங்களை தடுக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்.

அடுத்த பொதுத் தேர்தலில் மே 13 மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு அம்னோ பாரிசான் நேசனலுடன் ஒத்துழைக்கவும் அணுக்கமாக வேலை செய்யவும் டிஏபி-யும் பக்காத்தான் ராக்யாட்டும் முன் வருகின்றன. பாரிசான் நேசனல், பக்காத்தான் ராக்யாட் ஆகிய இரண்டு அரசியல் கூட்டணிகளும் மே 13 சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றாக வேலை செய்ய உண்மையிலேயே வாக்குறுதி அளிக்கும் போது அத்தகைய சம்பவங்கள் எப்படி மீண்டும் நிகழ முடியும் என கேட்பதற்கு மலேசியர்களுக்கு உரிமை உண்டு.

கடந்த தசாப்தங்களில் அம்னோவுக்கும் பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கட்டாயப்படுத்தும்  பொருட்டு வாக்காளர்களிடையே அச்சத்தை மூட்டுவதற்கு மே 13 பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கும் போது அந்தச் சம்பவத்தை முஹைடின் எழுப்பிய போது மே 13 மீண்டு நிகழாது எனத் துணைப் பிரதமர் வாக்குறுதி அளிக்கிறாரா அல்லது அம்னோ அதிகாரத்தை இழந்தால் இன்னொரு மே13 நிகழும் என மறைமுகமாக மருட்டுகிறாரா என்ற கேள்வி எழுகின்றது.

அடுத்த பொதுத் தேர்தலில் இன்னொரு மே 13 நிகழுமா ?  என் பதில் அழுத்தமாக இல்லை என்பதாகும். அந்த 1969 மே 13 துயரச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பது மீதான விவாதத்தில் இறங்க விரும்பவில்லை ( மே 13 கலவரங்களுக்கு யார் பொறுப்பு என்பது நேர்மாறான வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதால் அந்த சம்பவம் நிகழ்ந்தது முதல் அதற்கான காரணங்களைக் கண்டறிய சுயேச்சையான அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டு வருகிறது) இன்றைய சூழ்நிலைகள் 43 ஆண்டுகளுக்கு முன்னர் 1969ல் நிலவிய சூழ்நிலைகளிலிருந்து முற்றாக மாறுபட்டவை.

1969ம் ஆண்டுக்கும் 13வது பொதுத் தேர்தலுக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் புத்ராஜெயா அம்னோ/பிஎன் கொண்டுள்ள அதிகாரப் பிடிக்கு அமைதியாகவும் ஜனநாயக நீதியிலும் சவால் விடுக்கக் கூடிய பல இனங்களையும் பல சமயங்களையும் பிரதிநிதிக்கும் தேசியக் கூட்டணி உருவாகியிருப்பதாகும். டிஏபி, பிகேஆர், பாஸ் ஆகியவை இணைந்துள்ள பக்காத்தான் ராக்யாட் கூட்டணி மலேசியாவில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் வட்டாரங்களையும் கொண்ட மலேசியக் கூட்டணி ஆகும்.

பக்காத்தான் ராக்யாட் அடையும் எந்த வெற்றியும் எல்லா இனங்களையும் பிரதிநிதிக்கும் மலேசிய வெற்றியாக திகழும் வேளையில் இன்னொரு மே 13 என்ற முரண்பாடான சிந்தனையை நியாயப்படுத்துவதற்காக 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டின் வெற்றியை இன்னொரு இனத்துக்கு எதிரான ஒர் இனத்தின் வெற்றி என மிகவும் பொறுப்பற்ற தேசிய எதிர்ப்பு, தேசத் துரோகச் சக்திகள் மட்டுமே தவறாக திசை திருப்ப முயலும்.

“நாங்கள் மே 13 வது மீண்டும் நிகழ்வதைக் காண விரும்பவில்லை,” என முஹைடின் உண்மையிலேயே பிரகடனம் செய்துள்ளாரா ?”

அப்படி செய்துள்ளார் என்றால் பிரதமர் நஜிப் ரசாக் தமது மௌனத்தைக் கலைத்து கடந்த மூன்று  ஆண்டுகளாக நான் பல முறை எழுப்பியுள்ள இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்– புத்ராஜெயாவுக்கு பாரிசான் நேசனலுக்குப் பதில் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் தேர்வு செய்யப்படுவது உட்பட 13வது பொதுத் தேர்தலில் மக்களுடைய தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் தெளிவாகவும் ஐயத்துக்கு இடமின்றியும் அவர் பிரகடனம் செய்வாரா ?

இந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக கூட்டரசு அதிகாரம் அமைதியான வழியில் மாற்றிக் கொள்ளப்படுவதற்கு தாம் நேரடியாக உறுதி செய்யப் போவதாகவும் உதவி செய்யப் போவதாகவும் அவர் பிரகடனம் செய்வது மலேசியா வழக்கமான ஜனநாயகமாகி விட்டது, ஏன் நஜிப்பின் சொந்த வார்த்தைகளான “உலகில் தலை சிறந்த ஜனநாயகமாக” மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதற்கு ஒப்பாகும்.

————————————————————————————————–

லிம் கிட் சியாங் ஈப்போ தீமோர் எம்பி ஆவார்

TAGS: