வீடமைப்பு மற்றும் ஊராட்சி துணை அமைச்சர் லாஜிம் உகின், பாஸ் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டை இன்று சந்தித்தார். தங்கள் கட்சியில் சேருமாறு சாபா பாஸ் தலைவர்கள் அந்த பியுஃபோர்ட் எம்பிக்கு அழைப்பு விடுத்த இரண்டு நாள்களுக்குப் பின்னர் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அசீஸை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குச் சென்று லாஜிம் சந்தித்ததாக கட்சி நாளேடான ஹராகா டெய்லி கூறியது.
கடந்த சனிக்கிழமை சாபா பாஸ் இளைஞர் பகுதி தலைவர் லஹிருல் லதிகு, லாஜிம் தங்களுடன் இணய விரும்பினால் கட்சி அதைப் பெரிதும் வரவேற்கும் என்றார்.
“பாஸில் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் போன்ற நிபுணர்களும் சாதாரண மக்களும் சேர்ந்திருக்கிறார்கள். யார் வருவதையும் நாங்கள் தடுக்க மாட்டோம்”, என்றாரவர்.