சிரியாவின் போக்கு : பான் கீ மூன் கண்டனம்

பெல்கிரேட் : சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பிர‌யோகிப்பதாக கூறப்பட்டதற்க ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷார் அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்‌ச்சி செய்து வருகின்றனர். ஐ.நா.தூதுக்குழு அனுப்பி வைத்தும் அங்கு சண்டை ஓயவில்லை. தற்‌போது கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா ராணுவம் ரசாயன ஆயுதங்களை வீசவும் இருப்பு வைத்துள்ளதாக கூறிவருகிறது. இதற்கு ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செர்பியா சென்றிருந்து ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன், கூறுகையில், சிரியா ரசாயன ஆயுத இருப்புவைத்துள்ளது மாபெரும் குற்றச்செயல். ரசாயன ஆயுத ஒழிப்புஅமைப்பு (ஓ.பி.சி.டபிள்.யூ.) விதிமுறைக‌ளை சிரியா மீறுகிறது. எந்த சூழ்நிலையிலும் இது போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் சிரியா வரம்பு மீறி செயல்படுவது சரியல்ல என்றார்.