பிரதமரின் மதிப்பு ஒரு பக்கம் சற்றுக் குறைந்தது மறுபக்கம் சீனர்களின் ஆதரவால் உயர்ந்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தரமதிப்பீடு மே மாதம் 65விழுக்காட்டிலிருந்து ஜூனில் 64 விழுக்காட்டுக்குக் குறைந்தது. மலாய்க்காரர்களிடையேயும்  இந்தியர்களிடையேயும் அவரின் மதிப்பு குறைந்தது இதற்குக் காரணம்.

ஜூன் மாத இறுதியில் மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் நஜிப்பின் செயல்பாடுகளுக்கு மலாய்க்காரர்களிடையே இருந்த வரவேற்பு 75விழுக்காடு.இது, மே மாதம் இருந்ததைவிட நான்கு விழுக்காடு குறைவு. இந்தியர்களிடையே அது மூன்று விழுக்காடு குறைந்து 69விழுக்காடாக இருந்தது.

இதன் விளைவாக நஜிப்பின் மொத்த தரமதிப்பீடு குறைந்திருக்க வேண்டும்.ஆனால்,சீனர்களின் ஆதரவு அதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தியது.அவர்களிடம் நஜிப்பின் செயல்பாடுகளுக்கான வரவேற்பு முந்திய மாதம் இருந்ததைவிட ஐந்து விழுக்காடு உயர்ந்து  42விழுக்காடானது.

ஆக மொத்தத்தில் நஜிப்புக்குள்ள மதிப்பு நிலையாகத்தான் உள்ளது.ஆனால், அவரின் அரசாங்கத்துக்கான மதிப்பு அப்படி இல்லை என்று மெர்டேகா மையம் குறிப்பிடுகிறது.அரசாங்கத்தின் தரமதிப்பீடு ஆறு விழுக்காடு இறக்கம் கண்டிருக்கிறது.ஆய்வில் கலந்துகொண்டோரில் 42 விழுக்காட்டினர் மட்டுமே “அரசாங்கத்தின்மீது திருப்தி தெரிவித்தார்கள்”.

 

TAGS: