LIVE REPORT : சாலைகளில் பாதுகாப்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை!

குற்றச்செயல்கள் குறித்து செம்பருத்தி மேற்கொண்ட ஆய்வில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுவது தெரியவந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் (லிட்டில் இந்தியா) வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், 15-க்கும் மேற்பட்டவர்கள் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறினர்.

நகைகள் மற்றும் கைப்பை என்பன அவர்களிடமிருந்து பறித்து செல்லப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறையில் புகார்கள் செய்திருந்த போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் கூறினர்.

குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என  கருத்து கூறியவர்களில் பெரும்பாலானோர் வாணிபம் செய்பவர்கள். அதேவேளை, நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள்தான் தங்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளவேண்டும் எனவும் ஒரு சாரார் கூறினர்.

எனினும், ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்களின் கருத்திலிருந்து மக்களிடம் “சாலைகள்  பாதுகாப்பானவை அல்ல என்ற உணர்வு” மேலோங்கி இருப்பது புலனாகிறது.

 

TAGS: