லாஜிம்: கட்சி நீக்கினால் மட்டுமே அம்னோவிலிருந்து விலகுவேன்

பூபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லாஜிம் உகின் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதை இன்று அறிவித்தார்.

கடந்த ஜூன் 18 இல், துணை அமைச்சரான லாஜிம் கெராம்பை கெபத்து அம்னோ கிளையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் பூபோர்ட் அம்னோ தொகுதி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி லாஜிம் தொடர்ந்து துணை அமைச்சராகவும் கட்சியின் சாதாரண உறுப்பினராகவும் இருக்கப் போவதாக கூறினார்.

இதர கட்சிகளில் சேரும் திட்டம் ஏதும் தம்மிடம் இல்லை என்று கூறிய அவர், சபாவின் நலன்களுக்காக தாம் பக்கத்தானுடன் சேவையாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்ததாக அச்செய்தி கூறியது.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின், லாஜிம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு காத்திராமல் விலகிக்கொள்ள வேண்டும் என்று கூறிய ஒரு நாளைக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கட்சி நீக்கினால் மட்டுமே அவர் அம்னோவைவிட்டு வெளியேறுவார் என்று லாஜிம் வலியுறுத்தினார் என்று அச்செய்தி கூறுகிறது.

TAGS: