உங்கள் கருத்து: குற்றச் செயல்கள் கூடுவதற்குப் போலீஸ் திறமைக் குறைவே காரணம்

“தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பெருகி விட்டதற்கு போலீஸ் படை தனது கடமையை செய்யத் தவறியுள்ளதும் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதும் முக்கியக் காரணங்களாகும்.”

பாதுகாவலர்கள் மீது செலவு செய்யும் பணத்துக்கு எங்களுக்கு வரிக் கழிவுகள் கொடுங்கள்

அபாஸிர்: 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வரிகளை வசூலித்தும் மக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பை அரசாங்கம் வழங்கத் தவறி விட்டது. அதனால் தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. நடப்பு சூழ்நிலை அரசாங்கத்துக்கு தொடர்ந்து அவமானத்தைத் தருகின்ற விஷயமாகும். ஆனால் அது பற்றி அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அது “அறையில் இருக்கும் யானையை” அலட்சியம் செய்கின்றது. ஆனால் “வாக்குறுதிகள் காப்பாற்றப்பட்டு விட்டு விட்டதாக” பொய் சொல்கிறது.

ஸ்விபெண்டர்: தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பெருகியுள்ளது  போலீஸ் படை தனது கடமையை செய்யத் தவறியுள்ளதற்கும் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதற்கும் நல்ல அடையாளங்களாகும்.

போலீசார் தங்கள் கடமைகளை முறையாகவும் திறமையாகவும் செய்யத் தவறியுள்ளதால் நாம் பாதுகாப்பு இல்லாத ஒர் உணர்வைப் பெற்றுள்ளோம். ஆகவே போலீஸ் படையை சீர்திருத்துவதற்கு நீண்ட கால நடவடிக்கை அவசியமாகும். தனியார் பாதுகாப்பு சேவைகள் குறுகிய காலத் தீர்வாக அமையலாம்.

கேஎஸ்என்: தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத பகுதிகளையும் பாதுகாப்புச் சேவைகளுக்கு பணம் கொடுக்க முடியாதவர்களையும் என்ன செய்வது ?

பொது மக்கள் பாதுகாப்பு போலீசாரின் கடமையாகும். வேலையாகும். பொறுப்பாகும். அதனைச் செய்வதற்குப் போதுமான ஆட்கள் இல்லை என்றால் போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை கூட்டுங்கள்.

அரசாங்கமும் போலீஸும் தங்கள் கடமையிலிருந்து நழுவ முடியாது. எந்த மாற்று ஏற்பாடுகளும் பயனளிக்கப் போவதில்லை. போலீசார் தங்களுடைய திறமையை உயர்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

பூமிஅஸ்லி: குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பு நிறுவனங்களை அமர்த்துவது குற்றச் செயல்களை குறைத்துள்ளதா ?  பாதுகாப்பு போடப்பட்டுள்ள பகுதிகளில் பல கொள்ளைகள் நிகழ்ந்துள்ளதை நான் அறிவேன்.

இரண்டாவதாக அவற்றில் பாதுகாப்பும் திறமையானதாக இல்லை. நான் அத்தகைய பாதுகாப்பு  தடுப்புக்களை எளிதாகக் கடந்துள்ளேன்.

வரிக் கழிவு என்பது விவேகமான நடவடிக்கை அல்ல. அது தேவை இல்லாத சேவை ஆகும். மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்நியர்களை அமர்த்துவதற்குப் பதில் சமூக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

KPNG: தனியார் பாதுகாப்பு சேவைகளைக் குறை கூறுகின்றவர்களுக்கு நான் கூற விரும்புவது இது தான்:

முதலாவதாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால் குடியிருப்பாளர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நாடுகின்றனர். அந்த குடியிருப்பாளர்களும் பாதுகாவலர்களும் போலீஸ்காரர்களினால் (அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. பயிற்சியும் பெற்றுள்ளனர்) செய்ய முடியாத பெரிய வேலையைச் செய்வதாக எண்ணுகின்றனர்.

இரண்டாவதாக “பாதுகாவலர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆகவே பணம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என அவர்கள் சொல்கின்றனர்.  வங்கிகளும் நகை வியாபாரிகளும் கூட ஆயுதமேந்திய காவலர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதை நாம் அறிவோம்.

ஆகவே சமூகம் உங்களுக்கு என்ன செய்கிறது என வினவாமல் சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். மாதம் ஒன்றுக்கு நீங்கள் கொடுக்கும் 50 ரிங்கிட் உங்களுக்கு மன அமைதியத் தருகின்றது.

கார் வைத்திருப்பவன்: செராஸ் பகுதியில் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நான் பணம் செலுத்தி வருகிறேன். அரசாங்கமும் போலீஸும் திறமையாக இல்லாததே அதற்கு காரணம். மக்களிடம் பாதுகாப்பு உணர்வு இல்லை.

கார் நிறுத்துமிடங்கள், கழிப்பறைகள், வீடுகள், அலுவலகங்கள், சாலைகள் ஆகியவற்றில் குற்றச் செயல்கள் தொடருகின்றன. குற்றச் செயல் விகிதம் குறைந்துள்ளதாக அரசாங்கமும் போலீஸும் மட்டுமே கூறுகின்றன. அது உண்மை அல்ல. ஏனெனில் பல சம்பவங்கள் புகார் செய்யப்படுவதே இல்லை.

என் மகனும் மகளும் தேக்குவாண்டோ வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். அதற்கும் வரிக் கழிவு கொடுக்கப்படுமா ?

அடையாளம் இல்லாதவன்#29692505: அதனை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு பிஎன் -னை விரட்டுவதே நல்லது. ஏனெனில் அது மக்கள் வாழ்வதற்கு  பாதுகாப்பான நட்புறவான சூழ்நிலையை வழங்கத் தவறி விட்டது.

TAGS: