கார் வரிகள் வேண்டியவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு தேடித்தருகின்றன

உங்கள் கருத்து: “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புரோட்டானால் உலக அளவில் போட்டியிட முடியவில்லை என்றால் அது கடையை இழுத்துமூடுவதுதான் நல்லது”.

 

 

 

கார் விலைக்குறைப்பால் வேலையின்மை உருவாகும்

ஸ்வைபெண்டர்: புரோட்டோனைப் பாதுகாக்கும் முயற்சியால், இவ்வட்டாரத்தின் கார் தயாரிப்பு மையமாக விளங்கும் வாய்ப்பை தாய்லாந்திடம் பறிகொடுத்தோம். அது நடந்திருந்தால், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும், அந்நிய நேரடி முதலீடு பில்லியன் கணக்கில் வந்திருக்கும், கார்-தயாரிப்புக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் துணைத் தொழில்கள் உருவாகியிருக்கும். அத்தனையையும் இழந்து விட்டோம்.

புரோட்டானால் கண்ட பலன் என்ன?  உயர்ந்த விலையில் தரக்குறைவான கார்கள். புரோட்டோனில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்யும் சில ஆயிரம் பேருக்காக நாடே நிதியுதவி செய்து கொண்டிருக்கின்ற நிலை-இதுதான் கடந்த 30 சொச்சம் ஆண்டுகளாக கண்ட பலன்.

முப்பதாண்டுகளுப் பின் புரோட்டோனின் மதிப்புத்தான் என்ன?ஒன்றுமில்லை. மலேசியாவில்கூட அது மதிக்கப்படுவதில்லை. ஆனால், அதன் உற்பத்தி முறைகள் பற்றிக் கேலியும் கிண்டலும் நிறையவே செய்யப்படுவதைத்தான் பார்க்கிறோம்.

வாகனக் கொள்கை மட்டும் இல்லையென்றால் மலேசியா தென்கிழக்காசியாவின் வாகன உற்பத்தி மையமாக திகழ்ந்திருக்கும்.

இப்போது நடந்துவரும் விவாதங்கள், வேண்டியவர்களாக பார்த்து உதவும் ஒரு கட்டமைப்பு எவ்வளவு வலுவாக அமைந்துள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தி இருக்கும்.

பக்காத்தான் ரக்யாட் ஒன்றும் செய்யவில்லை-கார்களுக்கான உயர்ந்த வரிகளை அகற்றலாம் என்று பரிந்துரை மட்டுமே செய்தது-எப்படிக் குதிக்கிறார்கள், பாருங்கள்.

சொர்க்கம்:கார் விலைகளைக் குறைப்பது எளிது. ஏபி-களை எடுத்து விடுங்கள், சுங்க வரியில் கொஞ்சம் குறையுங்கள்.ஒரு காருக்கு ரிம10,000 மிச்சப்படும்.

அதனால் அம்னோ அல்லக்கைகளின் வருமானம்தான் குறையும். இந்த அரசாங்கம், நீண்ட காலமாகவே ஏழைகளிடமிருப்பதைப் பறித்து அம்னோ பணக்காரர்களிடம் கொடுத்து வந்துள்ளது.

புரோட்டோன், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அவரின் கையாள்களுக்கும் சொந்தமானது.இந்தக் கடற்கொள்ளையருக்கு நாம் உதவ வேண்டுமா, என்ன?

ஹஸ்ருல்: மக்களுக்கு நன்மை என்கிறபோது ஒரு சில அல்லக்கைகள் அவதிப்படட்டுமே.அதனால் மோசம் ஒன்றுமில்லை. சுயநலம் பாராமல் மக்கள் நலனைக் கவனியுங்கள்.

விஜார்ஜ்மை: கார் விலைக்குறைப்பு வேலையின்மையை ஏற்படுத்தும் என்பதைத் திரும்பத் திரும்ப மையநீரோட்ட ஊடகங்களில் சொல்லி வந்தால் பின்னர் அதுவே உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நிலை உருவாகலாம்.

ஆனால், உண்மை என்ன. விலை குறைந்தால் கார்கள்  கட்டுப்படியான விலையில் கிடைக்கும். மக்கள் கார்களைக் கூடுதலாக வாங்கத் தொடங்குவார்கள். கார்களுக்கான தேவை பெருகும்.

கார் பராமரிப்புத் தொழிலும் பெருகும்.
ரேபையர்: இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புரோட்டானால் உலக அளவில் போட்டியிட முடியவில்லை என்றால் அது கடையை இழுத்துமூடுவதுதான் நல்லது.

ஸ்டார்: மலாய் வாகன இறக்குமதியாளர்கள், வணிகர்கள் சங்கத்தின் எதிர்வினை அத்தொழில் பற்றிய  அவர்களின்  குறுகிய கண்ணோட்டத்தை மட்டுமே காண்பிக்கிறது. ஆனால். ஆதாயம் பெற முடியாத, போட்டியிடும் தன்மையற்ற ஒரு தொழிலை நாடு மொத்தமும் தோள்கொடுத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

மகாதிரின் முயற்சியால் உருவாக்கம் கண்ட ஒரு உதவாக்கரை திட்டத்தை வாழவைக்க நாடு நிறையவே துன்பப்பட்டு விட்டது.

புரோட்டோனைக் காக்க நாம் பட்ட பாடெல்லாம் வீண்தான்.பொறுப்பான அரசாங்கம் என்றால் ஓரு சிலரின் நலனைக் கருதாமல் மக்களின் துன்பத்துக்கு முடிவு கட்டியிருக்கும்.

பெயரிலி#08167141:மக்களே, விழித்துக்கொள்வீர்.அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும்வரை புது கார் வாங்காதீர். அல்லக்கைகள் கொள்ளை லாபம் பெறுவதற்காக நாம் கொட்டிக்கொடுக்க வேண்டியதில்லை.

புரோட்டனை வாழ வைப்பது மலேசியரின் தலைவிதியா, என்ன?

TAGS: