மெர்தேக்கா தினம் அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. அது மக்களுடையது

“மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? அது மக்களுக்கும் நாட்டுக்கும் சொந்தமானது என்று அல்லவா நான் நினைத்திருந்தேன்.”

பெர்க்காசா: ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) ஒர் அனைத்துலக சுலோகம்

மௌனமான பெரும்பான்மை: மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? – உண்மையில் திசை திருப்பப்பட்ட கருத்தாகும்.

அதாவது மெர்தேக்கா தினம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அது மக்களுக்கும் நாட்டுக்கும் சொந்தமானது என்று அல்லவா நான் நினைத்திருந்தேன்.

சிந்தனையை தெளிவுபடுத்திய கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டினுக்கு நன்றி. உங்கள் அறிவுரையை நான் மீண்டும் கேட்கக் கூடாது.

சின்ன அரக்கன்: பெர்க்காசா தலைவர்களுடைய சிந்தனைகளை மிகவும் குறுகியவை. அவர்களுடைய மதியுரையாளர்களான அம்னோ தலைவர்களும் குழம்பிப் போயிருக்கின்றனர்.

உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் அறிய முடியவில்லை. ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்ற 55வது மெர்தேக்கா கருப்பொருளுக்கு உலகளாவிய சிந்தனை ஏதுமில்லை.

உலகம் முழுவதும் நாடுகள் தங்கள் முன்னேற்றத்தையும் எதிர்கால இலட்சியங்களையும் கருத்தில் கொண்டு தேசிய தினக் கருப்பொருளை உருவாக்குகின்றன.

அரசியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுடைய நம்பிக்கையை அதிகரிப்பது அவற்றின் நோக்கமாக இருக்கும். மக்கள் அந்தக் கருப்பொருளில் பெருமை கொள்வது முக்கியமாகும்.

‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்ற சுலோகம் தேசிய தினக் கருப்பொருளுக்கான அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை. தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பிஎன் வகுத்ததே அந்தக் கருப்பொருளாகும்.

பெர்ட்: ‘Janji Ditepati’ என்பதைத் தேசிய தினக் கருப்பொருளாகக் கொண்ட நாடுகள் பட்டியலை பெர்க்காசா வெளியிட முடியுமா ?

குழப்பம் இல்லாதவன்: சுல்கிப்லி இரட்டை வேடம் கொண்ட கோமாளி. பிஎன் தேர்தல் பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என்ற கருப்பொருளை பிஎன் ஏற்றுக் கொண்டுள்ளது.

அவர் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் அது தெரிந்துள்ளது. சுல்கிப்லி போன்ற மக்களால் பிஎன் மேலும் ஆதரவை இழக்கப் போகின்றது.

சுல்கிப்லி உங்களுக்கு தெளிவாகத் தெரியாதது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் இனிமேல் காலத்திற்கு ஒவ்வாதவர்.

ஏபிகே: சுல்கிப்லி நூர்டின் அவர்களே ! கூலிம் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளில் எதனை நிறைவேற்றியுள்ளீர்கள் ? சொந்த இலாபத்துக்காக நீங்கள் கட்சி மாறினீர்கள். பிஎன் -னுக்கு நல்ல பிள்ளை போல இப்போது தோற்றமளிக்க முயலுகின்றீர்கள். ஆனால் அது உங்களை செனட்டர் பதவிக்குக் கூடப் பரிசீலிக்கப் போவதில்லை.

TAGS: