அமைச்சர்: அணைகளில் நீர் நிரம்பியுள்ளது தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்காது

சிலாங்கூர் அணைகளில் நீர் நிரம்பியிருப்பது மாநிலத்தில் தண்ணீர் நெருக்கடி ஏதுமில்லை எனபதைக் காட்டுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூவும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கூறியுள்ளதை எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் நிராகரித்துள்ளார்.

அந்த இருவரையும் பெயர் குறிப்பிடாமல் நீர் விநியோகம் என்பது எளிதான விஷயமல்ல என்றார் அவர்.

“அந்த தண்ணீர் பிரச்னையைக் கையாளுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ‘அணைகளில் நீர் நிரம்பி வழிகின்றது. அதனால் ஏன் கவலைப்பட வேண்டும்,” என எளிதாகச் சொல்வது போன்ற விஷயமல்ல அது.”

“ஆம் அணைகளில் நீர் முழுமையாக உள்ளது. ஆனால் நீங்கள் அந்தத் தண்ணீரை குடிக்க விரும்புகின்றீர்களா இல்லையா ? நீங்கள் அந்த ஆற்று நீரைக் குடிக்க விரும்புகின்றீர்களா இல்லையா ?”

“ஆம் தண்ணீர் உள்ளது. ஆனால் அது குடிப்பதற்குப் பாதுகாப்பானதாக இல்லை,” என மலேசிய சீன வர்த்தக சங்க பசுமை விருதை இன்று அறிமுகம் செய்த பின்னர் சின் நிருபர்களிடம் பேசினார்.

கடந்த மாதம் லியூ-வும் சேவியரும் சிலாங்கூரில் பல அணைகளைச் சுற்றிப் பார்த்தனர். அவற்றில் நீர் முழுமையாக இருப்பதாகக் கூறிய அவர்கள் தண்ணீர் நெருக்கடியை ஜோடிக்க வேண்டாம் என சபாஷ் என்ற Syarikat Bekalan Air Selangor-ரை எச்சரித்தனர்.

அந்தத் தண்ணீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் முக்கியமான விஷயம் தண்ணீர் அல்ல. நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என சின் சொன்னார்.

சில சுத்திகரிப்பு நிலையங்கள் தங்கள் சக்திக்கு மேல் இயங்குகின்றன. குறைவாகப் பயன்படுத்தப்படும் நிலையங்களினால் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என அவர் சொன்னார். காரணம் அவை இணைக்கப்படவில்லை.

அதனால் கூட்டரசு அரசாங்கம் லங்காட் 2 நிலையத்தைக் கட்டும் நடவடிக்கையைத் தொடரும் என அவர் அறிவித்தார்.

“லங்காட் 2 நிலையத்தை கட்டாவிட்டால் 2014 அல்லது 2016ம் ஆண்டு நாம் நிச்சயம் நீர் நெருக்கடியை எதிர்நோக்குவோம்,” என சின் சொன்னார்.

 

TAGS: