எல்ஆர்டி குத்தகை கொடுக்கப்பட்டது நமக்கு அவமானத்தைத் தருகிறது

“மலேசியாவில் மட்டுமே எல்லா அம்சங்களிலும் தோல்வி கண்ட ஒரு நிறுவனம் பல பில்லியன் டாலர் டெண்டரைப் பெற முடியும்.”

ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்வதை ஆவணங்கள் மெய்பிக்கின்றன என்கிறார் ராபிஸி

அடையாளம் இல்லாதவன்#19098644: அரசாங்கக் கொள்முதல், டெண்டர் நடைமுறைகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான நிதி அமைச்சு மீறியுள்ளதை அது உறுதி செய்கின்றது. அது ஊழல் நடவடிக்கையாகும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட முடியும்.

இரண்டாவதாக இது நமது நாட்டுக்கு அவமானத்தைத் தந்துள்ளது. ஊழல் குறியீட்டில் மலேசியாவின் நிலை மேலும் வீழ்ச்சி காணவே அது வழி வகுத்துள்ளது.

மூன்றாவதாக பெரும் எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்டு செல்லும் திட்டங்களை தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு கொடுப்பதின் மூலம் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுகின்றது.

அடுத்து வரும் தேர்தலில் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டால் மட்டுமே வெட்கமில்லாத ஊழல் பிஎன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிற்கும்.

பாத்தே: ரயில்  வேலைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு நிறுவனத்துக்கு ரயில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

செலவுகள் வான் அளவுக்கு உயரும் போது அந்த வேலையைச் செய்வதற்கு திறமை இல்லாத ஒரு நிறுவனத்துக்கு கொடுப்பதற்கு மலேசிய மக்களும் வரி செலுத்துவோரும் தயாராக இருப்பது நல்லது.

இப்போது கட்டப்பட்டு வருகின்ற குறைந்த கட்டண விமான நிலையத்துக்கு நேர்ந்ததை பாருங்கள். மலேசியாவை இறைவன் காப்பாற்றட்டும்.

அடையாளம் இல்லாதவன் #62163581: ஊழல் அரசியல்வாதிகளை ( அவர்களுடைய மனைவிகள்/கணவர்கள்) வீழ்த்துவதற்கு மக்களைத் தூண்டுவதற்கு இன்னும் எத்தனை விஷயங்கள் அம்பலத்துக்கு வர வேண்டும் ?

பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் போன்ற துணிச்சலான, கௌரவமான மனிதர்கள் தொடர்ந்து இயங்குவர்  என்பதே நமக்கு உள்ள ஒரே நம்பிக்கை.

மூன் டைம்: ராபிஸி உண்மையைச் சொல்கிறார். ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்கிறது. மலேசியாவில் மட்டுமே எல்லா அம்சங்களிலும் தோல்வி கண்ட ஒரு நிறுவனம் பல பில்லியன் டாலர் டெண்டரைப் பெற முடியும்.

ஆம். நான் சொல்வது உண்மையே. அம்னோ/பிஎன் சேவகர்களுக்குக் கொடுக்கப்பட்ட குத்தகைகளுடைய செலவுகள் கால ஒட்டத்தில் அதிகரிப்பது திண்ணம் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் புத்ராஜெயாவிலிருந்து பிஎன் -னை விரட்ட வேண்டும் என்ற எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அடையாளம் இல்லாதவன்_3e86: எல்லாப் பொய்களையும் மறைத்து விடலாம் என பிஎன் எண்ணுகிறது.

இணையம் இல்லாத பல ஆண்டுகளுக்கு முன்பு அதனை செய்து விடலாம். அப்போது அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல் பலருக்குக் கிடையாது.

ஐந்து தசாப்தங்களாக பொய்கள் கூறப்பட்டு ஏமாற்று வேலைகளும் நிகழ்ந்த பின்னர் தங்களை பிஎன் எப்படி ஏமாற்றியுள்ளது என்பதை அரசு சேவையில் உள்ள பலர் உணரத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக பிஎன் வளர்த்து விட்ட ‘ஊழல்’ என்னும் நோயை விரட்டுவதற்கு பலர் இப்போது எதிர்க்கட்சிகளுக்குத் தகவல்களைக் கொடுத்து வருகின்றனர்.

மக்கள் பணத்தை நன்றாக உடை அணிந்துள்ள (பிஎன்) கிரிமினல்கள் மக்கள் பணத்தை பெருமளவுக்கு உறிஞ்சும் வேளையில் தகவல்களை அம்பலப்படுத்துவோரை முடக்குவதற்கு அதிகாரத்துவ ரகசியச் சட்டம், வங்கி நீதி நிறுவனச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், தேசத் துரோகச் சட்டம் போன்ற பல சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

TAGS: