“அந்த இயக்கத்தில் அப்பட்டமான பொய்கள் மூலம் டிஏபி-யை அரக்கனாக திரைப்படத்தில் சித்திரிக்கும் சுஹாய்மி பாபா போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.”
மந்திரி புசார் வீட்டுக்கு வெளியில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை கிட் சியாங் மறுக்கிறார்
உண்மையான வீரர்: டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் அத்தகைய வெறுக்கத்தக்க செயலை செய்துள்ளார் எனக் குற்றம் சாட்டுவதே அபத்தமானது. காரணம் அந்தக் கொடிக் கம்பத்தை பொது மக்கள் எளிதில் அணுக முடியாது. ஏனெனில் அது அப்போதைய மந்திரி புசார் ஹருண் இட்ரிஸின் வீட்டு வளாகத்துக்குள் இருந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் வேலி போடப்பட்டிருந்தது. அத்துடன் காவல்காரர்களும் இருந்தார்கள்.
நான் அன்றைய தினம்- பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளுக்காக அடுத்த நாள் அதிகாலை மணி 3.30-லிருந்து 5.30 வரை- அங்கு இருந்தேன்.
சுயேச்சை: லிம் கிட் சியாங் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் இந்தப் படம் கோத்தா கினாபாலு பழைய விமான நிலையக் கட்டிடத்தில் எடுக்கப்பட்டதாகும்.
அந்த அதிகாரிகள் வெள்ளைச் சட்டை சீருடை அணிந்திருந்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஆவர்.
லிம் கிட் சியாங் சபாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அப்போதைய சபா முதலமைச்சர் ஹாரிஸ் சாலே ஆணையிட்டார்.
நான் அப்போது விமானத்துக்குள் இருந்தேன். லிம் சக்கர நாற்காலி ஒன்றில் வைக்கப்பட்டு விமானத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
அபாஸிர்: டிஏபி-யைச் சேர்ந்த சீனர் ஒருவரைப் பயன்படுத்தி தகவல் அறியாத, எப்போதும் ஆதரவை நாடும் மலாய்க்காரர்களை அச்சுறுத்துவதே அம்னோ திட்டமாகும். மலாய் வாக்குகள் சிதறி விட்டன என்பதையும் ‘மலாய் ஒற்றுமைக்கான’ வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து விட்டது என்பதையும் உணர்ந்த பின்னர் இவ்வாறு செய்யப்படுகின்றது.
‘மலாய்க்காரர்களை அச்சுறுத்தும்’ இயக்கத்தில் அந்த இயக்கத்தில் அப்பட்டமான பொய்கள் மூலம் டிஏபி-யையும் லிம் கிட் சியாங்கையும் அரக்கர்களாக திரைப்படத்தில் சித்திரிக்கும் சுஹாய்மி பாபா போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அந்தத் திரைப்படம் பெரும்பாலும் மலாய் பெரும்பான்மை பகுதிகளில் தேர்தல் தினத்துக்கு முன்பு வெளியிடப்படும். ஊடகங்கள் மட்டுமின்றி திரைப்படங்களும் கூட இப்போது விலை போகின்றன.
பார்த்தவன்: ஒரு காலத்தில் ‘வல்லமையுடன்’ திகழ்ந்த பிஎன் ஒற்றுமையை சிறிதளவு கூட வளர்க்காத அந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் அளவுக்குத் தாழ்ந்துள்ளது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது.
அதிகாரத்தில் நிலைத்திருக்க பிஎன் அரசாங்கம் எல்லா குறுக்கு வழிகளையும் கையாளுகின்றது. 13வது பொதுத் தேர்தல் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அடையாளம் இல்லாதவன் #62163581: கிட் சியாங் அவர்களை அம்பலப்படுத்துங்கள். வழக்குப் போடுங்கள். பொய்களை அவிழ்த்து விடுவதற்கு அந்த இனவாதிகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றனர் ?
அது அவர்களையே திருப்பித் தாக்கப் போகிறது. அவர்கள் பொய்களை மக்கள் அறிந்துள்ளனர். அதனால் அந்தத் திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
இறுதி: டிஏபி-யைக் களங்கப்படுத்த பிரதமர் நஜிப் ரசாக் தொடங்கியுள்ள இன்னொரு இயக்கம் இதுவாகும். அவர்கள் சொல்வதை நீங்கள் நம்புகின்றீர்களா ?
பாப் தியோ: அந்த விவகாரத்தை ஆழமாக ஆராய அதிகாரத்துவச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள மே 13 தொடர்பான ஆவணங்களை பொது மக்கள் பார்ப்பதற்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
1987ம் ஆண்டு அப்போதைய அம்னோ இளைஞர் தலைவர் நஜிப் தலைமையில் டிபிசிஏ அரங்கத்தில் நிகழ்ந்த பேரணி பற்றிய ரகசிய ஆவணங்களையும் போலீஸ் சிறப்புப் பிரிவு வெளியிட வேண்டும்.
நஜிப் அந்த இனத்துவேஷ வார்த்தைகளை சொன்னாரா இல்லையா என்பதை அது நிரூபிக்க உதவும். சீனர்கள் மீது அம்னோ இளைஞர்கள் வெறுப்புக் கொண்டிருந்ததையும் அது காட்டும்.
நான் அதற்கு ஒரு சாட்சியாகும். அங்கிருந்த கும்பல் பகைமை உணர்வை காட்டிய வேளையில் அங்கிருந்து வெளியேறுமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். எங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதால் அரங்கத்திலிருந்து வெளியேறுமாறு என்னையும் மற்ற மலாய்க்காரர் அல்லாத நிருபர்களையும் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் எங்களைப் பாதுகாப்பாக அரங்கத்திலிருந்து வெளியே கொண்டு சென்றனர். மக்கள் உணர்வுகளைத் தூண்டி விட்டு மே 13க்கு வழி வகுத்த அம்னோ நடவடிக்கையைப் போன்றதே இதுவாகும். தனது நோக்கத்தை அடைய அம்னோ அடாவடித்தனத்திலும் இறங்கும்.
லாங்யான் ரென்: நான் மே 13 காலத்தில் வாழ்ந்தவன். உண்மையில் அந்த விஷயம் என்னைக் குழப்புகின்றது. உண்மையில் லிம் கிட் சியாங் அவ்வாறு செய்திருந்தால் ஏன் யாரும் அதனைப் பார்க்கவில்லை. கடந்த 46 ஆண்டுகளில் ஏன் யாரும் அது பற்றிக் கேள்விப்படவில்லை.
அம்னோ/பிஎன் தனது சவக்குழியைத் தோண்டிக் கொள்கிறது. வாக்காளர்களிடமிருந்து பலத்த அடியை நீங்கள் பெறப் போகின்றீர்கள். இத்தகைய முட்டாள்தனமான உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளுக்காக நீங்கள் வருந்தப் போகின்றீர்கள்.
நியாயமானவன்: லிம் கிட் சியாங் அவர்களே, அவர்களிடம் உருப்படியான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் எப்போதோ உங்களை முடித்திருப்பார்கள். ஏன் இப்போது ? அதனால் அவர்களுடைய முட்டாள்தனமான நடவடிக்கையை பொருட்படுத்த வேண்டாம்.