அம்பிகாவுடன் தமிழ் ஊடகங்கள்!

தூயத் தேர்தல் வழி சனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர முடியுமா? இந்த கேள்வியை மையமாக கொண்டு சமூக அமைப்புகளின் விருந்து நிகழ்வு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் (சா ஆலம்)  நடைபெறவுள்ளது.

இதில் டத்தோ அம்பிகா சீனிவாசன், நமது நாட்டின் நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களுடன் அரசமைப்புச் சட்ட சார்புடைய வகையில் தனது கருத்துகளை விவாதிப்பார். முன்னாள் தொழிற்சங்கவாதியான ஜிவி காத்தையாவும் சுவராம் இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகமும் இதை வழிநடத்துவர்.  தமிழ், மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயன் படுத்தப்படும்.

முன்னாள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவரான அம்பிகா சீனிவாசன், 2009-ஆம் ஆண்டில் உலக அளவில் துணிவான பெண்மணியாக அமெரிக்காவின் செயலவை தேர்வு செய்து கௌவுரவித்த எட்டு பெண்களில் ஒருவராவார்.

தூயத் தேர்தலுக்காக இரண்டு முறை மலேசியாவில் நடைபெற்ற பேரணிகளுக்கு அம்பிகா தலைமை தாங்கினார். அதன் தாக்கம் பல்லின மக்களிடையே அவரை பிரபலமாக்கியதோடு அவருக்கு சவாலாகவும் உருவெடுத்தது.

“அம்பிகாவின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் நமது போராட்ட உணர்வுடன் உரசிப் பார்க்கவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறோம்” என்கிறார் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

மலேசியாவில் உள்ள இந்திய அமைப்புகளின் சார்பாக நடத்தப்படும் இந்த விருந்து நிகழ்வில் பலதரப்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவார்கள்.

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ் நாளிதழ்கள் தயாராக உள்ளதாகவும், இதன் தொகுப்பை கையேடாக வெளியிட வல்லினம் குழுவினர் உதவ முன்வந்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்வமுள்ளவர்கள், குணராஜ் 012-3925995, சேகரன் 016-2510752, மாலதி 03-26926533 என்ற எண்களுடன் தொடர்பு கொண்டு நுழைவு அட்டைகளை பெறலாம்.

நுழைவு அட்டைகள் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: