ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக உணவு விடுதியை நடத்தும் ஒப்பந்தம் மஇகா இளைஞர் தலைவர் ஒருவருடைய நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான எஸ் வேள்பாரி தலையிட்டதை நிரூபிப்பதாகக் கூறப்படும் அதிகமான ஆவணங்களை பிகேஆர் இன்று வெளியிட்டது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி எம்ஐஇடி என்ற மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தில் அதன் விவரங்கள் அடங்கியுள்ளதாக பிகேஆர் தேசிய வியூக கொள்கைப் பிரிவு செயலாளர் எஸ் கோபிகிருஷ்ணன் கூறினார்.
“வேள்பாரி நேரடியாகத் தலையிட்டு பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் ஜே தினகரனுக்கு அந்தக் குத்தகை கிடைப்பதை உறுதி செய்தார். அது, எம்ஐஇடி தலைவராக இருந்த எஸ் சாமிவேலுக்கு அப்போதைய எம்ஐஇடி தலைமை நிர்வாக அதிகாரி பி சித்ரகலா எழுதியுள்ள கடிதத்தின் மூலம் மெய்பிக்கப்பட்டுள்ளது,” என கோபிகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறினார்.
பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் ஜே தினகரன், வேள்பாரியின் பெயரைக் குறிப்பிட்ட வேளையில் தாம் தங்களது விலை மேற்கோள்களை ( quotations ) அனுப்பியிருந்த மற்ற சில நிறுவனங்களின் விளக்கங்களை பார்க்கத் தயாராக இருந்ததாக மலேசியாகினி -க்கு காட்டப்பட்ட அந்தக் கடிதத்தில் சித்ரகலா குறிப்பிட்டுள்ளார்.
“நான் அந்த விளக்கங்களைக் கோருவதற்கு முன்னர் வேள்பாரியின் நண்பர் எனத் தம்மைக் கூறிக் கொண்டு திரு தினா எனப்படும் ஒருவர் எம்ஐஇடி-யில் தம்மைப் பார்க்க வந்தார்.”
“அந்த உணவு விடுதி குத்தகை பற்றிப் பேசுவதற்காக என்னைச் சந்திக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக தினகரன் சொன்னார். அவரது நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்றும் விரைவில் விளக்கம் அளிக்க அவர்களை அழைப்போம் என்றும் நான் அவரிடம் கூறினேன்,” என சித்ரகலா அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாகக் கூறப்பட்டது.
தாம் தலையிட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்பு கொள்ளப்பட்ட போது வேள்பாரி மறுத்தார். எம்ஐஇடி ஏற்பாடு செய்த தடயவியல் தணிக்கை நடத்தப்படும் வரையில் அந்தக் குத்தகை தினகரனுடைய Jaya Cafe Holdings Sdn Bhdக்கு வழங்கப்பட்டுள்ளது தமக்குத் தெரியாது என அவர் சொன்னார்.