இணையத் தளங்கள் பிஎன் ஆதரவுக் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக கைரி குற்றம் சாட்டுகிறார்

மலேசியாகினி, மலேசியா இன்சைடர் (TMI) போன்ற செய்தி இணையத் தளங்கள் பிஎன் -னுக்கு ஆதரவாக வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் விளைவாக இளைஞர்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கின்றனர் என்னும் தோற்றம் உருவாகியுள்ளதாக அவர் சொன்னார்.

கைரி இன்று கோலாலம்பூரில் பிஎன் இளைஞர் இணையக் குழுவை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

“நாம் மலேசியாகினியிலும் மலேசியா இன்சைடரிலும் வெளியாகும் கருத்துக்கள் பக்கத்தைப் படித்தால் எதிர்க்கட்சிகளைப் பலர் ஆதரிப்பதாக எண்ணத் தோன்றும். அவற்றின் ஆசிரியர்கள் பிஎன்-னுக்கு அனுதாபமாக உள்ள கருத்துக்களைத் தடுத்து விடுகின்றனர் என்பதும் எங்களுக்குத் தெரியும்.”

“அதனை முறியடிப்பதும் BNCT டிவிட்டர், முகநூல் வழியாக பிஎன் -னிடமிருந்து சரியான தகவல்களை மக்கள் பெறுவதற்கு ஊக்கமூட்டுவதும் பிஎன் இணையக் குழு அமைக்கப்பட்டுள்ளதின் நோக்கமாகும்.”

“இணையத்தில் பிஎன்-னை ஆதரிப்பதால் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்ற உணர்வை இளையோர் பெறாமல் இருப்பதற்கும் அது துணை புரியும்,” என்றும் கைரி குறிப்பிட்டார்.

 

TAGS: