ஊடகங்களுக்குச் சொந்தமான படப்பிடிப்புக் கருவிகளை போலீஸ் எடுத்துக் கொள்வது தவறு என பெர்சே 3.0 பேரணியின் போது கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
“நிருபர்களிடமிருந்து நாங்கள் கேமிராக்களைப் பறிமுதல் செய்யக் கூடாது,” என ஏஎஸ்பி ஒங் பெங் கியோங் என்ற அந்த அதிகாரி சொன்னார்.
அவர், ஜுலை 28ம் தேதி பெர்சே பேரணியின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை அத்துமீறல்கள் மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணையில் சாட்சியமளித்தார்.
அவை அபாயகரமான ஆயுதங்களாக இல்லாத வரையில் கைது செய்யும் அதிகாரிகள் யாரையும் கைது செய்யும் போது அவரிடமிருந்து எந்த தனிப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்யக் கூடாது என்பது தமது கருத்து என அவர் சுஹாக்காம் குழுவிடம் கூறினார்.