‘பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள் தோல்வி, ஒற்றுமைச் சீர்குலைவுக்கு அறிகுறி அல்ல’

பக்காத்தான் கட்டுக்குள் இருக்கும் நான்கு மாநிலங்கள் பொதுவான மெர்தேக்கா தினக் கருப்பொருள் மீது தொடக்கத்தில் இணக்கம் காணத் தவறியுள்ளது அந்தக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதைக் காட்டவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

ஏனெனில் இப்போது எல்லா நான்கு மாநிலங்களும் Sebangsa, Senegara Sejiwa என்னும் கருப்பொருளை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என்று இன்று நிருபர்கள் கூட்டத்தில் அன்வார் சொன்னார்.

மாநில நிலையிலான கருப்பொருள்களுடன் இணைக் கருப்பொருளாக பக்காத்தான் தலைமைத்துவம் ஏற்றுக் கொண்ட Sebangsa, Senegara Sejiwa-வை பயன்படுத்த அந்த நான்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

“தங்கள் மாநில கருப்பொருள் மீது பினாங்கு, கிளந்தான், கெடா ஆகியவை ஏற்கனவே முடிவு செய்திருந்தன. அந்த விவகாரம் பக்காத்தான் மன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது பக்காத்தான் கருப்பொருளைப் பயன்படுத்தவும் மாநிலங்கள் தயார் எனக் கூறின. அந்த மாற்றத்துக்காக நாங்கள் அவற்றுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார் அன்வார்.

 

TAGS: