டிஏபி-இன் தற்காப்புக்காகக் களம் இறங்கியுள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், ஹூடுட் சட்டம் மலேசியாவில் அமல்படுத்தப்படாது என்று பிரதமரே அறிவித்திருக்கும்போது டிஏபி-யை மட்டும் தனியே குறை சொல்வது ஏன் என்று அவர் வினவுகிறார்.
“டிஏபி ஹூடுட்டை ஆதரிப்பதில்லை எனவே அக்கட்சியை ஆதரிப்பது ஹராம், பாவமான செயல் என்று சமயத் தீவிரவாதிகள், குறிப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
“ஆனால், மசீசவும் அம்னோவும்கூடத்தான் ஹூடுட்டை ஆதரிப்பதில்லை.(முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதிர் முகம்மட் கிளந்தான் மந்திரி புசாருக்குக் கடிதம் எழுதி மலேசியாவில் ஹுடூட்டை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.நஜிப்பும் அதை வலியுறுத்தியுள்ளார்……”, என்று அன்வார் கூறினார்.
நஜிப் 2011, செப்டம்பர் 25-இல் அரசாங்கம் நடப்பு நிலவரங்களைக் கருத்தில்கொண்டு ஹூடுட்டை அமல்படுத்தாது என்று கூறியதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே அமலாக்கப்பட்ட பலவற்றில் ஹூடுட் அம்சங்கள் உண்டு என்றாலும் “தீவிரத் தன்மை இன்றி” அவை அமலாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.