“இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான குடிமக்களை-தோட்டப்புற இந்தியர்களை- மகாதீர் ஏன் ஆதரிக்க மறுக்கிறார்.”
சபா மக்கள் தொகை பெருக்கத்தை மகாதீர் நியாயப்படுத்துகிறார்
ஜோ பெர்னாண்டெஸ்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிக்கைகள் உண்மையை திசை திருப்புகின்றன. கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் யாரும் மலேசியக் குடிமக்களாக முடியும்.
சபாவுக்குள் சட்டப்பூர்வமான பயணப் பத்திரங்கள் ஏதும் இல்லாமால் நுழைந்து அங்கு நீண்ட காலம் வாழ்வதும் மலாய் மொழியைப் பேச முடிவதும் ஒருவர் குடிமகனாவதற்குத் தகுதியை வழங்காது. இந்த நாட்டில் சட்டப்பூர்வமாக தங்கியிருப்பதற்கு நுழைவு அனுமதி முக்கியமாகும். ஒருவர் முதலில் வேலை அனுமதி, அடுத்து தற்காலிக வசிப்பிடத் தகுதி, நிரந்தர வசிப்பிடத் தகுதி, குடியுரிமை ஆகியவற்றைப் படிப்படியாகப் பெற வேண்டும்.
சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் பிரச்னைக்கு அடிப்படை, அவர்களுக்கு அந்த மாநிலத்தில் பிறந்ததாக கூறும் உள்ளூர் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகும். அதன் மூலம் அவர்கள் சட்டத்தின் மூலம் குடிமக்கள் எனக் கருதப்பட்டு அவர்களுக்கு மை கார்டுகள் கொடுக்கப்பட்டன.
சபாவில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அரசியல் நோக்கமே காரணம். வாக்காளர் பட்டியலில் அதனைத் தெளிவாக உணர முடியும். ஆகவே அந்த உண்மையை அரச விசாரணை ஆணையம் எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் போகிறது ?
சபாவில் உள்ள கட்சிகள் துணையுடன் பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் மகாதீர் தமது முதிய வயதைக் கம்பிகளுக்கு பின்னால் கழிக்க வேண்டியிருக்கும்.
முஷிரோ: அடையாளக் கார்டு திட்டத்தில் பங்கு இருந்ததை டாக்டர் மகாதீர் ஒப்புக் கொள்கிறாரா? பல ஆண்டுகள் காத்திருந்தும் உண்மையான மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படவில்லை. மலேசியர்களை திருமணம் செய்து கொண்டுள்ள பல தேர்ச்சி பெற்ற கணவர் அல்லது மனைவியருக்கு குடியுரிமை தரப்படவில்லை.
இருந்தாலும் ஒரு தேர்தலுக்கு முன்னதாக இந்தோனிசியர்களுக்கும் பிலிப்பினோக்களுக்கும் கொடுக்கப்பட்ட குடியுரிமைகள் காரணமாக சபாவில் திடீரென மக்கள் தொகை பெருகியது.
அவர்கள் பாஹாசா மலேசியாவைச் சரளமாகப் பேசுவதுதான் காரணம் என்பது உண்மை அல்ல. தாம் அவர்களை பேட்டி கண்டது போல மகாதீர் பேசுகிறார். அங்கு தேர்தலில் அம்னோ வெற்றி பெறுவதே நோக்கம். அந்தத் திட்டத்தை வகுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டின் துரோகிகள்.
ஒங்: “நமது அரசியல் இன அடிப்படையில் இருக்கக் கூடாது என விரும்பினால் நாம் நமது இன வம்சாவளிகளை மறந்து விட வேண்டும். தேசிய மொழியை நமது தாய் மொழியாகப் பேச வேண்டும். இந்த நாட்டுக்கு விசுவாசத்தை தெரிவிக்க வேண்டும்,” என மகாதீர் சொல்கிறார்.
மகாதீர் சொல்வதை நமது பாபா, நோன்யா சமூகம் ஏற்கனவே செய்துள்ளது. அவர்களுடைய பிள்ளைகளுக்கு முன்னோர்கள் மொழியான சீன மொழியைப் பேசவே தெரியாது. இருந்தும் அவர்கள் ‘pendatangs’ என்றே கருதப்படுகின்றனர்.
தேசிய ஒருங்கிணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ‘masuk Islam’ என்பதையும் மகாதீர் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
கால்வெர்ட் யாப்: எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்ற சீனநண்பர் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் இப்போது என்னை விட சரளாமாக மலாய் பேசுகிறார். ஆகவே அவருக்கு அடையாளக் கார்டு கிடைக்க நான் அவரை கொண்டு செல்லலாமா?
பெர்ட் தான்: இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான குடிமக்களை-தோட்டப்புற இந்தியர்களை- மகாதீர் ஏன் ஆதரிக்க மறுக்கிறார்.
பலர் இந்த நாட்டில் நாடற்றவர்களாக ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு அவர்களுடைய பிறப்பை பெற்றோர்கள் பதிவு செய்யத் தவறிய அறியாமையே காரணம். சிலருக்குச் சிவப்பு அடையாளக் கார்டுகள் கூட இல்லை. வெளியே செல்வதற்குக் கூட அஞ்சுகின்றனர். சாதாரண சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களைப் போன்று தாங்கள் கைது செய்யப்படலாம் என அவர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம்.
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் நாடற்றவர்களுடைய -பெரும்பாலும் இந்தியர்கள்- துயரங்களைப் போக்க வேண்டும். அவர்களுடைய விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவர்களைக் குடிமக்களாக்க வேண்டும்.
ஆகவே பின்-னுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் எல்லா மலேசியர்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுதான் நமக்கு உள்ள ஒரே வாய்ப்பு.
புரோராட்: சபாவில் உள்ள இந்தோனிசிய சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் மலாய் மொழியைபேசுகின்றனர். அதனால் மை கார்டுகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு இயல்பாகவே தகுதி இருப்பதாக மகாதீர் சொல்கிறார்.
ஆனால் இந்த நாட்டில் பிறந்து மலாய் மொழியைப் பேசும் நாடற்ற 300,000 இந்தியர்கள் நிலை என்ன? அவர்களுக்கு ஏன் மை கார்டுகள் கொடுக்கப்படவில்லை?
மலேசியக் குடி மகன்: அந்த அப்பட்டமான அடையாளக் கார்டு ஊழலை உருவாக்குவதில் தமக்கு பங்கு இருந்ததை மகாதீர் வேறு வழி இல்லாமல் கடைசியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பூமி: உங்கள் இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண் பூமிபுத்ராவாகி முதல் தர குடி மக்களுக்கு உரிய எல்லா நன்மைகளையும் அனுபவிப்பதை நீங்கள் காணும் போது உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்படும். அதே வேளையில் நீங்கள் ஒரங்கட்டப்பட்ட இரண்டாம் தர மலேசியர்களாகவே இருப்பீர்கள்.