பிகேஆர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் மின் விநியோகத் தடை ஏற்பட்டால் அதற்கு டிஎன்பி-யே குற்றவாளி

கிள்ளான் பள்ளத்தாக்கில் மின் விநியோகத் தடை ஏற்பட்டால் அதற்கு டிஎன்பி என்ற தெனாகா நேசனல் பெர்ஹாட்டே  உண்மையான குற்றவாளியாக இருக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது.

CAR எனப்படும் வலிமைப்படுத்தும் மத்தியப் பகுதி திட்டத்தை அமலாக்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு 275KV சக்தியைக் கொண்ட விநியோகக் கோபுரங்களை ரவாங்கில் உள்ள கம்போங் சுங்கை தெரெந்தோங் வழியாக நிர்மாணிக்க வேண்டும் என அரசாங்கத்துடன் தொடர்புடைய அந்த நிறுவனம் வலியுறுத்துவதே காரணமாகும்.

“அந்த CAR திட்டம் கம்போங் சுங்கை தெரெந்தோங் வழியாகச் செல்ல வேண்டும் என்பதை டிஎன்பி வற்புறுத்திக் கொண்டிருப்பதே தாமதத்திற்குக் காரணம் என்பது எங்கள் பதிலாகும்,” என பிகேஆர் தலைமைப் பொருளாளர் வில்லியம் லியாங் இன்று நிருபர்களிடம் கூறினார்.

டிஎன்பி உதவித் தலைவர் ரோஸிமி ரெமெலி நேற்று விடுத்த அறிக்கைக்கு லியாங் பதில் அளித்தார்.

தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) தொடங்கியுள்ள வலிமைப்படுத்தும் மத்தியப் பகுதி திட்டம் (CAR) மீது மாநில அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுமானால் சிலாங்கூர், கோலாலம்பூர் பகுதிகள் மின் நெருக்கடியை எதிர்நோக்கும் என ரோஸிமி சொன்னதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் சிலாங்கூர் பொருளாதார மன்றத்துடன் 27 கூட்டங்களை நடத்தியுள்ளோம். விநியோகத்துக்கான அடிப்படை வசதிகள் முழுமையடைவதை உறுதி செய்ய மாநில அரசாங்கம் விரைவாக ஒரு முடிவு எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றும் ரோஸிமி குறிப்ப்ட்டுள்ளார்.

 

TAGS: