இந்த முறை மகாதீருக்கு நினைவிருக்குமா ?

“மகாதீர் தமது சொந்த நிழலைக் கண்டு அஞ்சுவது நிச்சயம். காரணம் ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதற்கு அவரும் உடந்தை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும்.”

சபா ஆர்சிஐ பயனற்றது என்கிறார் மகாதீர்

ஸ்விபெண்டர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆர்சிஐ குறித்து அச்சப்படுகிறார். அவர் போலியான துணிச்சலைக் காட்டுவது அதனை உணர்த்துகிறது.

தாம் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த நேரத்தில் நூறாயிரக்கணக்கான இந்தோனிசியர்களும் பிலிப்பினோக்காளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டு குடியுரிமை கொடுக்கப்பட்ட திட்டம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என அவர்  சொல்ல முடியாது.

நமது கடலோரத்தில் தரையிறங்கிய வியட்னாமிய போர் அகதிகள் சுற்றி வளைக்கப்பட்ட போது ஒருவர் கூட தப்பிக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை மகாதீர் விளக்குவரா ?

நடப்பு அரசாங்கத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் உங்களையும் உங்கள் நிர்வாகத்தையும் சார்ந்தது. அரசியல் அதிகாரத்துக்காக நீங்கள் சபாவை அந்நியர்களிடம் விற்று விட்டீர்கள். இப்போது உங்கள் பாரம்பரியம் தீவகற்ப மலேசியாவில் அதுவும் குறிப்பாக சிலாங்கூரில் பின்பற்றப்படுகிறது

ஸ்டார்ர்: மகாதீர் தமது சொந்த நிழலைக் கண்டு அஞ்சுவது நிச்சயம். காரணம் ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதற்கு அவரும் உடந்தை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும்.

தென் பிலிப்பீன்ஸுக்கும் அப்போதைய பிரிட்டிஷ் வட போர்னியோவுக்கும் இடையிலான எல்லை நன்கு குறியிடப்படவில்லை என்றும் அதனால் மக்கள் நீண்ட காலத்துக்கு அங்கும் இங்கும் எளிதாக வந்து போய்க் கொண்டிருந்தனர் என்றும் நீங்கள் சொல்வது அபத்தமானது.

அந்த மக்கள் வருவதைத் தடுக்க எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த கூட்டரசு அரசாங்கம் தவறி விட்டதால் எளிதாக அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தனர்.

மலேசியா இந்தோனிசியா பகைமைக் காலத்தில் எதிரிகள் ஊடுருவாமல் தடுக்க எல்லைகளை கூட்டரசு அரசாங்கம் நன்றாகத் தானே காவல் புரிந்தது. ஆனால் இப்போது ஏன் ? அதற்கான பதில் எல்லோருக்கும் தெரியும்.

கதைகள்: எல்லைகளைப் பாதுகாப்பதும் அவற்றில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுமே எந்த ஒரு நவீன நாடும் செய்யும் முதல் வேலையாகும். சபா எல்லைகள் கண்காணிக்கப்படாததால் அது இப்போது தோல்வி கண்ட மாநிலமாகி விட்டது.

முடவன்: அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு தாம் பின்னணியில் இருந்தது தெரிய வந்து விடும் என அறிந்துள்ளதால் மகாதீர் ஆர்சிஐ அமைக்கப்படுவதை வன்மையாக எதிர்க்கிறார்.

அடுத்த கூட்டரசுன் அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்கும் சாத்தியம் உருவாகியிருப்பதால் அவர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் சாத்தியமுள்ளது. தமது தோல்விகளுக்கும் குறைகளுக்கும் மற்றவர்கள் மீது பழி போடும் ஒரு மனிதருக்கு அது பேரிடியாகும்.

காகாகோமோ: அம்னோ தங்களை இவ்வளவு காலம் ஏமாற்றி வந்துள்ளதை சபா மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். அதனால் மலேசியாவில் இன்னும் ஏழ்மையான மாநிலமாகவே சபா இருக்கிறது. அந்த  புதிய குடிமக்கள் காரணமாக அவர்களுடைய வாழ்வதாரமே மருட்டலுக்கு இலக்காகியுள்ளது. அரசாங்க மாற்றமே சபா மக்களைக் காப்பாற்றும்.

புடோயூ: ஆர்சிஐ முடிவு அரசுக்குச் சாதகமாக இருந்தால் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறும். முடிவு எதிராக இருந்தால் அது அரசாங்கத்தின் கழுத்தை நெறிக்கும் என்கிறார் மகாதீர்.

என்ன அரசாங்கம் ? அந்தப் பிரச்னைகளுக்கு நீங்களே காரணம் என்றும் அரசாங்கம் அல்ல என்றும் ஆர்சிஐ கண்டு பிடிக்கப் போகிறது.

உப்பா: இந்த விஷயத்தில் மகாதீர் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். சபா ஆர்சிஐ வெறும் பொது உறவு நடவடிக்கையாகவே முடியப் போகிறது.

மகாதீர் செய்த தவறுகளை சரி செய்ய ஏதோ நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என சபா மக்களை நம்ப வைப்பதோடு அது முடிந்து விடும்.

 

TAGS: