வேதா, இண்ட்ராப் தனித்து நிற்கவியலாது

“ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட நினைக்கும் அவர்,பல தரப்புகளுடன் சேர்ந்துதான் செயல்பட வேண்டும்.அதற்கு பக்காத்தான் ஒன்றுதான் வழி”. 

இண்ட்ராப் அரசியலில் ஈடுபடாது

பெயரிலி #19098644: நாட்டுக்கு மாற்றம் தேவை.அம்மாற்றத்தைக் கொண்டுவர பக்காத்தான் ரக்யாட் ஒன்றால் மட்டுமே முடியும்.அதற்குத்தான் பரந்த ஆதரவு உண்டு.

இண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி,இந்திய சமூகத்தின்பால் கவனம் செலுத்தும் வேளையில் நாட்டில் உள்ள எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடி  நாட்டு நிர்மாணிப்பில் முக்கிய பங்காற்ற முடியும்.அதைச் செம்மையுற செய்ய அவர் பலருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.அதற்கு பக்காத்தான் ஒன்றே வழி.

பிஎன் ஒட்டுமொத்த மதிப்பையும் இழந்துவிட்டது.அதை வெளியேற்ற மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.இந்நிலையில் வேதா, பக்காத்தானில் சேர்ந்தாலும் அல்லது அதனுடன் ஒத்துழைத்தாலும் பலர் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள்.

நியாயவான்: வேதா, அவரின் தமையனார் உதயகுமாரைப்போல் சுயநலமியோ அதிகார ஆசை உள்ளவரோ அல்லர்.  அவர் நடைமுறைவாதி, அறிவுசீவி.

வேதா, இந்தியர்களின் மேன்மைக்காக பக்காத்தானுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.வேதா பக்காத்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்கள் புத்ராஜெயாவைக் கைப்பற்றியதும் சிறுபான்மை இந்தியர்களுக்காக செய்யப்பட வேண்டியவை பற்றி அக்கூட்டணியுடன் விவாதிக்கலாம்.

பிஎன்னுக்கு 55ஆண்டுகள் கொடுத்துப் பார்த்துவிட்டோம்.அவர்கள் என்ன செய்தார்கள்- கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டைக் கொள்ளை அடித்தார்கள்.அதுதான் கண்ட பலன்.பக்காத்தானுக்கு ஐந்தாண்டுகள் வாய்ப்பு கொடுப்போமே.கொடுத்து அவர்கள் இந்தியர்கள் உள்பட எல்லா இனத்தவர் வாழ்க்கையும் மேம்பட என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமே.

பிஎன்னால் சேர்ந்துள்ள எல்லாப் பிரச்னைகளையும் ஐந்தே ஆண்டுகளில் தீர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 30 விழுக்காட்டு பிரச்னைகள் தீர்க்கப்பட்டு மற்றவை பரிசீலிக்கப்பட்டால்கூட போதும் பக்காத்தான் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறது என்று திருப்தி கொள்ளலாம்.

வலைப்பதிவன்: வேதாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.தோட்டப்புறங்களிலிருந்து போதுமான இழப்பீடுகள் கொடுக்கப்படாமல் விரட்டி அடிக்கப்பட்ட இந்தியர்களின் பரிதாபமான நிலையை அறிவேன்.

அதே வேளையில்,எல்லாவற்றிலும் பக்காத்தான் இனச் சார்பற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க விரும்புவதையும் அவர் மதிக்க வேண்டும்.

ஜோசப்பின்: ஒதுக்கப்பட்ட இந்திய சமூகத்துக்காக போராடிய ஒரே இயக்கம் இண்ட்ராப்தான்.இண்ட்ராப், கவனப்படுத்தும் வரையில் பொதுவில் மலேசியர்கள் இந்தியர்களின் பிரச்னைகளை அறியாமலேயே இருந்தார்கள்.

லண்டனில் சிவில் வழக்கு தொடரப்பட்டது பிரிட்டனுக்கு வைக்கப்பட்ட தருண குண்டு.குத்தகைத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டவர்களின் வம்சாவளியினர் அந்த வழக்கை அணுக்கமாகக் கவனித்து வருகிறார்கள்.இண்ட்ராப், இன்னொரு சுனாமியை உண்டாக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சத்து மலேசியா: இந்நாட்டில் ஏழை இந்தியர்களின் நிலையை எண்ணிப்பார்த்தால்….அந்தோ பரிதாபம்.ஒற்றுமையின்றி அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவியலாது.

வேதா, இண்ட்ராப் போராட்டத்தைத் தொடர விரும்புவது பாராட்டத்தக்கது.ஆனால், அவர் பிரதமர் நஜிப் ரசாக் அடிக்கடி சொல்லும் ‘நம்பிக்கை’-யை நம்பாமல் இருப்பதே நல்லது.நம்பினால், பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.

நான்காண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள வேதா, இந்தியர் பிரச்னைகளை இப்போது வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும்.

ஆனால், அதி முக்கியமான கேள்வி ஒன்று  உண்டு. பிரிந்து கிடக்கும் இந்தியர்களை ஒன்றுபடுத்துவது எப்படி? ஒற்றுமையின்றேல் நம்மை எதிர்நோக்கும் பணியைச் செய்வது கடினமாகும்.ஒன்று பட்டால் வாழ்வோம், வேறுபட்டால் வீழ்வோம்.

 

 

 

 

TAGS: