‘நாம் பகுதி-இந்தியப் பிரதமரை 22 ஆண்டுகள் பெற்றிருக்கவில்லையா ?’

“ஒர் இந்தியர் துணைப் பிரதமராக இருப்பதால் எந்த நன்மையும் இல்லை. ஒரு மலையாளியான மகாதீர் 22 ஆண்டுகளுக்குப் பிரதமராக இருந்துள்ளார். அவர் இந்தியர்களுக்கு என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை.”

பொதுத் தேர்தல் கோரிக்கைகளை நியாட் பட்டியலிடுகிறது-மலேசிய இந்தியர் துணைப் பிரதமர் தேவை

ஸ்விபெண்டர்: அதிகாரிகள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டுமே தவிர உங்கள் சரும நிறத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. ஆனால் நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு இப்போது விடுத்துள்ள கோரிக்கை அம்னோ இப்போது பின்பற்றுகின்ற இன அரசியல், இனத் தகுதி ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

ஒடுக்கு முறைக்கும் இன, சமய பாகுபாட்டுக்கும் ஒதுக்கப்படுவதற்கும் எதிராக நாம் போராட்டுகிறோம். சமூக நீதி, நியாயம், சம வாய்ப்பு, தேவை அடிப்படையிலான ஆதரவுக் கொள்கை, இன, சமய, பண்பாட்டு வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான குடியுரிமை ஆகியவற்றை நாம் மேம்படுத்த விரும்புகிறோம். ஆனால் நியாட் சொல்வது இன அடிப்படையைக் கொண்ட நடப்பு முறையைத் தொடரும் முயற்சியாகும்.

திட்டங்களும் வளங்கள் ஒதுக்கப்படுவதும் வியூகங்களும் தேவைக்கு இணங்க இல்லாமல் இன்னும் இன அடித்தளத்தில் இருந்தால் இந்திய அதிகாரிகளை நியமிப்பது எந்த வகையில் இந்தியர்களுக்கு உதவப் போகிறது ?

பால் வாரென்: நாம் 22 ஆண்டுகளுக்கு இந்தியர் ஒருவரைப் பிரதமராகப் பெற்றிருந்தோம். அவர் நிச்சயமாக தம்மை இந்தியர் எனச் சொல்லிக் கொள்ள மாட்டார். தாம் மலாய்க்காரர் என எண்ண வைத்து மலாய்க்காரர்களை முட்டாளாக்கிக் கொண்டிருந்தார்.

என் பிள்ளைகளின் தாய் சீன வம்சாவளியைச் சார்ந்தவர். ஆனால் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியர்கள் எனக் குறிக்கப்படுகின்றனர். நமது முன்னாள் பிரதமருடைய தந்தை ஒர் இந்தியர். தாயார் மலாய்க்காரர். ஆகவே அவர் எப்படி மலாய்க்காரர் என அதிகாரப்பூர்வமாகக் குறிக்கப்படுகிறார் ?

எனவே நியாட் உங்கள் சில கோரிக்கைகளைப் பார்க்கும் போது நீங்கள் உண்மையில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஜோ பெர்னாண்டெஸ்: இந்தியர் பிரச்னை உண்மையில் தோட்டங்கள் துண்டாடப்பட்டு  மேம்பாட்டுக்காக விற்கப்பட்டதாலும் அல்லது பரம்பரை பரம்பரையாக அவற்றில் இருந்த இந்தியத் தொழிலாளர்களுக்குப் பதில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சேர்க்கப்பட்டதாலும் அங்கிருந்து புறம்போக்குக் குடிசைப் பகுதிகளுக்கு விரட்டப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்டதாகும்.

அவர்கள் மீண்டும் சாலைகளுக்குச் செல்லும் முன்னர் அவர்களுடைய நாடற்ற நிலை உட்பட எல்லாப் பிரச்னைகளையும் தீருங்கள். ஒர் இந்தியர் துணைப் பிரதமராக இருப்பதால் எந்த நன்மையும் இல்லை.

ஒரு மலையாளியான மகாதீர் 22 ஆண்டுகளுக்குப் பிரதமராக இருந்துள்ளார். அவர் இந்தியர்களுக்கு என்ன செய்தார் ? ஒன்றுமே இல்லை.

உங்கள் அடிச்சுவட்டில்: நிச்சயமாக நாம் பதவிகளைக் கோரலாம். அவர்கள் இந்தியர்களுக்குத்  துணைப் பிரதமர் பதவியையும் கொடுக்கலாம். ஆனால் அவர் உபசரணைப் பிரிவுக்குப் பொறுப்பு வகிப்பார். அதாவது விமான நிலையத்துக்குச் சென்று பெருமக்களை வரவேற்பதாகும். அடுத்து சிறுபான்மை விவகாரம் அதாவது ஒராங் அஸ்லி விவகாரத் துறை போன்ற பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்படும்.

இந்திய சமூகம் அதன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தும் யோசனைகள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை. அரசாங்கமோ சமூகமோ உங்களுக்கு உதவப் போவதில்லை.

ஹிம்ம்ம்ம்:  அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எந்தக் கட்சியும் இந்தியர்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மட்டுமே நியாட் கோர வேண்டும்.

தகுதியுள்ள ஒருவர் இந்தியராக இருந்தால் அவர் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தில் இயல்பாகவே பிரதமராகி விட வேண்டும். அது தான் முக்கியம்.

தகுதியான நபர்கள் இல்லாத வேளையில் பதவிகளைக் கோருவதில் எந்த நன்மையும் இல்லை. அது வெறும் அலங்காரமாகவே இருக்கும். எதிர்கால மலேசியாவுக்கு அது தேவை இல்லை.

கெட்டிக்கார வாக்காளர்: நியாட் கோரும் விஷயங்கள் நாம் இப்போது காண்கின்ற விஷயங்களிலிருந்து மாறுபடவில்லை. அம்னோ, மசீச, மஇகா உறுப்பினர்கள் செய்வதைப் பாருங்கள்.

நாம் ஏமாற்றப்பட்டோம். அந்தச் சந்தர்ப்பவாதிகள் தங்களை வளப்படுத்திக் கொண்டனர். அவர்கள் சார்ந்துள்ள சமூகங்கள் தவிக்க விடப்பட்டுள்ளன.

அடையாளம் இல்லாதவன் #90800716:நாம் இந்த இன உணர்வை ஒதுக்கி விட்டு ஒதுக்கப்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் போராட வேண்டும்.

TAGS: