சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்

சிரியா நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க சிரிய அரசு போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், நேற்று கிழக்கு சிரியாவில் சிரியா இராணுவ போர் விமானம் ஒன்று வெடித்துச் சிதறி, தரையில் விழுந்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியது என சிரியா அரசு செய்தி தொலைக்காட்சியில் அறிவித்தது.

ஆனால், கிழக்கு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் சிரிய போர் விமானம் வானில் தாழ்வாகப் பறந்துவந்தபோது, தாங்கள்தான் அதை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்தனர்.

போர் விமானம் வெடித்து சிதறும்போது கிளர்ச்சியாளர்கள் வெற்றிகளிப்பில் கோஷமிட்டனர். இதேவேளை சிரியாவில் பல பகுதிகளில் இராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.