““பக்காத்தான் பக்கம் சாய்கின்ற வாக்காளர் எண்ணிக்கையே முக்கியமானது. அந்த எண்ணிக்கை கணிசமாக இருந்தால் பிஎன் அரசாங்கம் தரையை முத்தமிட்டு விடும்.”
மேலும் மூன்று பிஎன் பேராளர்கள் கட்சி மாறுவர் என்கிறார் லாஜிம்
குவிக்னோபாண்ட்: கோழிக் குஞ்சுகள் பொறிப்பதற்கு முன்னரே அவற்றை எண்ண வேண்டாம் என நான் பிஏஆர்- கட்சிக்கு அறிவுரை கூறுகிறேன். கட்சித் தாவல்கள் தொடரட்டும். எது நல்லது என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.
அது பிஎன் -னுக்கு நிகழ முடியுமானால் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் நடக்கலாம். அந்தத் தவளைகளினால் ‘பெரிய தாக்கம்’ ஏற்படப் போவதில்லை. ஏனெனில் மாநில அளவிலும் கூட்டரசு நிலையிலும் அவர்கள் ஆளும் கட்சியை நிர்ணயிக்கப் போவதில்லை.
பிஎன் -னிடம் ஆவி வாக்காளர்களும் சட்ட விரோத வாக்காளர்களும் இருக்கும் வரையில் 13வது பொதுத் தேர்தலினால் எந்த நன்மையும் இல்லை. பிஎன் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது திண்ணம். அது பிஎன் -னுடைய தார்மீக உணர்வுகளை மட்டுமே சீர்குலைக்கும்.
ஒரே கேலிக் கூத்து: கட்சி மாறும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை. பக்காத்தான் பக்கம் சாய்கின்ற வாக்காளர் எண்ணிக்கையே முக்கியமானது. அந்த எண்ணிக்கை கணிசமாக இருந்தால் பிஎன் அரசாங்கம் தரையை முத்தமிட்டு விடும்.
எங்கள் வாக்கு: பிஎன் -னிலிருந்து பக்காத்தான் பக்கம் சாய்கின்ற யாரையும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். நீண்ட காலம் பிஎன் -னை ஆதரித்ததற்காக அவர்களை மன்னித்து விட வேண்டும். அவர்கள் அம்னோ/பிஎன் வீழ்ச்சிக்கு உதவினால் போதும்.
நமது பொதுவான முதலாவது எதிரியான அம்னோ/பிஎன் -னை தோற்கடிக்க செய்வதற்கு நாம் அவர்களை அரவணைத்து குழுவாக இயங்க வேண்டும்.
நாம் வெற்றி பெற நமக்கு எண்ணிக்கை தேவை. அம்னோ/பிஎன் -னை வீழ்த்துவதற்கு அபாயத்தை எதிர்கொள்ளவும் துணிச்சலாக போராடவும் நாம் பரந்த சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்.
தாய்லெக்: பியூபோர்ட் எம்பி லாஜிம் உக்கின் அவர்களே எளிதாக அந்த முயற்சியைக் கை விட வேண்டாம். இல்லை என்றால் எல்லா சபா பிஎன் எம்பி-க்களையும் கட்டாயமான 9 மாத கால வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவுக்கு பிஎன் கொண்டு சென்று விடும்.
பீரங்கி: கட்சி மாறும் தவளைகள் பற்றி உள்ளூர் நாளேடுகளில் அன்றாடம் செய்தி வந்தாலும் அது பற்றி சபா அம்னோ கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் அதனிடம் இரண்டு ரகசிய ஆயுதங்கள் உள்ளன.
1) பிஎன் -னுக்கு வாக்களிப்பதற்காக ‘அடையாளக் கார்டு திட்டத்தில்’ நன்மை அடைந்த நூறாயிரக்கணக்கான மக்கள் திரட்டப்படுவர்.
2) வெளிநாடுகளிலிருந்து பில்லியன் கணக்கான பணம் கொண்டு வரப்பட்டு ஒவ்வொருவருடைய பைகளிலும் நிரப்பப்படும். அவர்கள் கடன்பட்ட உணர்வுடன் பிஎன் -னுக்கு வாக்களிப்பர் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்.
ஒய்வு பெற்ற நீதிபதி: பிஎன் தனது தலைவர்கள் கட்சி தாவுவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அம்னோவிடம் இப்ராஹிம் அலியும் ஹசான் அலியும் உள்ளனர்.
அவர்களுடைய செயல்களினால் சீனர்களும் இந்தியர்களும் கிறிஸ்துவர்களும் எதிர்க்கட்சிகளுக்கு செல்வர். அம்னோ, மசீச, மஇகா, கெரக்கான் ஆகியவை வரும் சுனாமியில் மூழ்கப் போவதையும் அவர்கள் உறுதி செய்வர்.
இரண்டு காசு: பிஎன் -னிலிருது ‘மாற’ விரும்பும் யாரும் தயவு செய்து அவசரப்பட வேண்டாம். உங்கள் வழியில் அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்குகிறது. நிச்சயம் அள்ளிக் கொடுக்கும் உணர்வில் அதிர்ஷ்ட தேவதை இருக்கும். ஆகவே அதனை வாங்கிக் கொண்டு கட்சி மாறுங்கள்.
அடையாளம் இல்லாதவன்_3ee4: கட்சி மாறியவர்களை 13வது பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம். பேராக்கில் செய்ததைப் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்க பிஎன் நிச்சயம் முற்படும்.
ஒராங் ஜாவ்: அன்புள்ள சபா மக்களே, பணம் உங்களை ஈர்க்குமானால் உங்கள் பேரப் பிள்ளைகள் வீட்டுப் பணிப் பெண்களாகவும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் வேலை செய்வதற்கு இந்தோனிசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லாத நிலையில் அதன் பாதுகாப்புப் படைகளுடைய கண்ணுக்குப் படாமல் நள்ளிரவு நேரத்தில் எல்லையை கடந்து இந்தோனிசியாவுக்குள் செல்லும் நிலையை எண்ணிப் பாருங்கள்.