பாக் லா-வுக்கும் நஜிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்

 “சீர்திருத்தங்கள் குறித்து பாக் லா உண்மையான போக்கைக் காட்டினார். ஆனால் அதனை அமலாக்குவதற்கான உறுதி இல்லை. அதே வேளையில் நஜிப், சீர்திருத்தங்கள் பற்றி எப்போதும் உண்மையாக நடந்து கொண்டதில்லை. ஆகவே அதனைப் பின்பற்றுவது வேறு விஷயம்.”

 

 

நான் வலிமையை காட்டியிருக்க வேண்டும் என பாக் லா கூறுகிறார்

கேஎஸ்என்: அப்துல்லா அகமட் படாவி அவர்களே, என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் அடிப்படையில் நல்ல, சாதாரண மனிதர். ஆனால் பிரதமர் என்னும் முறையில் வலிமையைக் காட்டுவது உங்கள் கடமையாகும். நீங்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வர நீங்கள் தீவிரமாக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் கொள்கைகளை அமலாக்கியிருந்தால் அம்னோவிலுள்ள எல்லா தீய சக்திகளும் நாட்டுக்கும் குறிப்பாக மலாய்க்காரர்களுக்கும் தெரிய வந்திருக்கும்.

மலாய்க்காரர்களுக்கும் மலேசியாவுக்கும் சில நன்மைகளை செய்ய முயன்றவர் என பொது மக்கள் உங்களை நினைவில் வைத்திருப்பர்.

டிகேசி:  பாக் லா-வுக்கும் நஜிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள். சீர்திருத்தங்கள் குறித்து பாக் லா உண்மையான போக்கைக் காட்டினார். ஆனால் அதனை அமலாக்குவதற்கான உறுதி இல்லை. அதே வேளையில் நஜிப் சீர்திருத்தங்கள் பற்றி எப்போதும் உண்மையாக நடந்து கொண்டதில்லை. ஆகவே அதனை பின்பற்றுவது வேறு விஷயம்.

இரண்டு காசு மதிப்பு: நீங்கள் கட்டாயப்படுத்தியிருந்தால் அம்னோவில் உள்ள ஜமீன்தார்கள் உங்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பார்கள். நீங்கள் பதவியில் இருந்த காலம் வரைக்கும் கூட நீங்கள் நீடித்திருக்க முடியாது. உங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தன. ஆனால் தவறான அரங்கம்.

முடியாது: மக்கள் உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தனர். ஆனால் நீங்கள் வாக்குறுதி அளித்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான துணிச்சல் உங்களிடம் இல்லை.

நீங்கள் அமலாக்க விரும்பிய சீர்திருத்தங்கள் மீது நீங்கள் தெளிவாக இருந்தீர்களா இல்லையா என்பது இப்போது முக்கியமல்ல. வரலாறு படைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள். தூங்கி விட்ட முன்னாள் பிரதமராக மட்டுமே உங்களை வரலாறு நினைவில் வைத்திருக்கும்.

பேஸ்: என்ன சீர்திருத்தங்கள்? நீங்கள் வெற்றிக் குழுவை மாற்ற முடியாது. 54 ஆண்டுகளாக தேர்தல்களில் “வெற்றி பெற்ற” பின்னர் அது நிச்சயம் முடியாது. ஆகவே பாக் லா நீங்கள் வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள்.

உங்கள் பலவீனம் தொகுதித் தலைவர்களை எப்போதும் கவர்ந்தது இல்லை. அந்தத் தலைவர்கள் ஜமீன்தார்களைப் போல இயங்கி உங்கள் தலைவிதியை நிர்ணயம் செய்தனர். இப்போது நஜிப்பின் தலைவிதியையும் நிர்ணயம் செய்கின்றனர். ஆகவே அம்னோ விரும்பினாலும் அது தன்னைத் திருத்திக் கொள்ள முடியாது.

புரவலர் முறை அம்னோவில் வேரூன்றி விட்டது. ஜமீன்தார்களுக்கும் சேவகர்களுக்கும் தீனி போட தானியம் நிறைந்த பெரிய பெரிய கொள்கலன்கள் தேவை.
 
பொறுமையாகவும் விசுவாசமாகவும் இருக்கும்படியும் பணம் பண்ணுவதற்கு தங்கள் நேரம் வரும் வரை காத்திருக்குமாறும் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்குக் கூறப்படுகிறது. ஆகவே அந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்தால் அந்த அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவார்கள்.

நீங்கள் புரட்சி செய்து தோல்வி கண்டால் நீங்கள் விரும்பத்தகாத நபராகி விடுவீர்கள். ஆகவே புதிய கரையான்களுக்கு நடப்பு முறை பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டரசு அரசாங்கத்தை இழந்து தானியம் நிறைந்த கொள்கலன்கள் போனால் மட்டுமே அம்னோ திருந்தும்.

யார் அந்த முகமூடி?: பேஸ், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அம்னோ எப்படி இயங்குகிறது என்பதை நீங்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள். என் கருத்தும் அதுவே.

ரிக் தியோ: மலேசிய அரசியலில் பலவீனமான தலைவர்களை நாம் பெற்றிருப்பது நமது துரதிர்ஷ்டமாகும். அலை வீசும் பக்கத்தில் மட்டுமே அவர்கள் நீந்த முடியும். எதிர்நீச்சல் போட முடியாது. நமது இப்போதைய தலைவர்களைப் பாருங்கள். யாருக்குமே தலைமைத்துவப் பண்புகள் இல்லை.

பெர்க்காசாவை சரியான இடத்தில் வைப்பதற்கும் உத்துசான் மலேசியா வெளியிடும் கட்டுரைகள் தேசத் துரோகமானவை என்று அதனிடம் சொல்வதற்கும் துணிச்சல் உள்ள தலைவர்கள் தேவை. அதற்கு மாறாக தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர். அதனால் அந்த ஏடு உணர்வுகளைத் தூண்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிடுகிறது. ஆகவே அரசாங்கத்தை மாற்றினால் மட்டுமே நமது அமைப்புக்களை திருத்த முடியும்.

TAGS: