கொள்ளையரைத் தடுத்து நிறுத்திய ‘தய் சீ’’ஃபோங்குக்கு பாராட்டுகள்

உங்கள் கருத்து: “போலீஸ், சமூக ஆர்வலர்களையும் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளையும் துரத்திக்கொண்டிராமல் திருடர்களையும் கொள்ளையரையும் பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்களேயானால் இந்நாடு அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக விளங்கும்.”

தப்பிக்க முயன்ற வழிப்பறிக் கொள்ளையன் முகத்தில் குத்தினார் புக்கிட் பிந்தாங் எம்பி

பெயரிலி  #19098644:புக்கிட் பிந்தாங் எம்பிக்குப் பாராட்டுகள்.குற்ற அலையைத் தடுத்து நிறுத்த நாம் அனைவரும் நம் பங்கினை  ஆற்றிட வேண்டும்.

போலீசும் அதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.மரங்களுக்குப் பின்னே மறைந்து நின்று, தப்பு செய்யும் வாகனமோட்டுனர்களைப் பிடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் திருடர்களையும் கொள்ளையர்களையும் கடத்தல்காரர்களையும் பிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

பெயரிலி: ஒரு எம்பி கண்ணெதிரே குற்றச்செயல் நிகழ்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அந்த அளவுக்கு நாட்டில் குற்றச்செயல்கள் பெருகியிருக்கின்றன.

பெயரிலி_VV: ஃபோங், எம்பி கடமைகளுடன்  போலீஸ் வேலையையும் செய்கிறார் போலும்.

கோன்மென்:சம்பவத்தில் திருடனைப் பிடிக்க உதவிய அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. மக்கள் நடமாட அஞ்சும் இருட்டு ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளாக தெருக்கள் இருப்பதை மாற்ற வேண்டும்.

தே கீ கீட்: ஒரு ஒய்பி இப்படிப்பட்ட செயலைச் செய்யும்போது சீருடை அணிந்து தக்க ஆயுதங்களையும் தாங்கியவர்கள் என்ன செய்கிறார்கள், ஆயுதம் ஏந்தியிராத செய்தியாளர்களையும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வோரையும் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள்.

கிட் பி:இப்படிப்பட்ட வழிப்பறிக்கொள்ளை  மலேசிய தெருக்களில் அன்றாடம் நடக்கிறது.குற்றம் பெருகியுள்ளது என்பது “வெறும் நினைப்புத்தான்” என்று பிஎன்னும் அரச மலேசிய போலீசும் கூறும் கதையை நம்ப  யாரும் தயாராக இல்லை.

போலீசார் தாங்கள் கூறுவதே உண்மை என்பதை நிரூபிக்க, தெரு குற்றங்கள் பற்றிப் புகார் செய்ய வருவோரைக்கூட புகார் செய்ய விடாமல் தடுக்கப் பார்க்கிறார்களாம்.

வீரா: போலீஸ், சமூக ஆர்வலர்களையும் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளையும் துரத்திக்கொண்டிராமல் திருடர்களையும் கொள்ளையரையும் பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்களேயானால் இந்நாடு அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக விளங்கும்.

பூட்சி: பகலில் காவல் சுற்றுகளில் ஈடுபட போலீசுக்கு நேரமிருப்பதில்லை.இரவில் குடித்துவிட்டு காரோட்டுவோரைப் பிடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

காலை பின்னேரம் அல்லது முற்பகலில் பழைய கிள்ளான் சாலை அல்லது கம்போங் டத்தோ ஹருனுக்குச் செல்லுங்கள்.போலீஸ்,  போக்குவரத்துக் குற்றம் புரிவோரைப் பிடிப்பதற்காகவே காத்திருப்பதைப் பார்க்கலாம்.

கூட்டரசு நெடுஞ்சாலையிலும்  ஆபத்து அவசரத் தடத்தைப் பயன்படுத்தும் வாகனங்களைப் பிடிப்பதற்கெனவே கொளுத்தும் வெய்யிலிலும் காத்திருப்பார்கள்.ஆனால், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு மட்டும் நேரமிருக்காது.

அனாக்பியு: ‘தய் சீ’ ஃபோங் அவர்களே, உங்கள் தீரச் செயலுக்குப் பாராட்டு.போலீஸ் கிடக்கட்டும். சாதாரண மக்கள் தாங்களேதான் இப்படிப்பட்ட விசயங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

TAGS: