அயோவா: அயோவாவில் நடந்த கண்காட்சிக்கு திடீர் என்று சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூக்கை 9 மாத குழந்தை தொட்டுப் பார்த்தது. அதற்கு அவர் என்ன என் மூக்கு பெரிதாக உள்ளதா என்று கேட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஒபாமா வாக்கு சேகரிக்க அயோவாவில் 3 நாள் பிரச்சாரம் செய்கிறார். நேற்று அவர் பேருந்து மூலம் அயோவா சென்றபோது அங்கு நடந்து கொண்டிருந்த கண்காட்சியைப் பார்த்து அங்கே பேருந்தை நிறுத்துமாறு கூறினார். பின்னர் கண்காட்சி நடந்த இடத்திற்குள் சென்ற அவரைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுமார் 1 மணிநேரம் அங்கு இருந்த அவர் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார்.
அப்போது டெபோரா என்ற பெண்ணின் கையில் இருந்த 9 மாத குழந்தை கோல் நில்சனைப் பார்த்து ஒபாமா அதன் முன்பு குனிந்தார். உடனே அந்த குழந்தை அவரின் முகத்தை தன் கையால் தொட்டது. அதன் விரல்கள் தனது மூக்கில் பட்டவுடன் என் மூக்கைப் பற்றி என்ன நினைக்கிறாய். பெரிய மூககாக இருக்கிறதல்லவா என்று குழந்தையிடம் கேட்டுச் சிரித்தார்.
அவர் குழந்தைகளுடன் பேசி மகிழ்வதைப் பார்த்த மக்கள் அடுத்த 4 வருடமும் ஒபாமா தான் அதிபர் என்று கோஷமிட்டனர்.