மெக்டொனால்ட்: அன்வார் வழக்கைப் போன்று உலகில் வேறு எதுவும் இல்லை

56  மணி நேரம் கழித்து குதத்திலிருந்து எடுக்கப்பட்டு  48 மணி நேரம் திறந்த சூழலில் வைக்கப்பட்ட பின்னர் மரபணுவை இரசாயன நிபுணர் மீட்க முடிந்திருப்பது, அந்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உலகில் நீண்ட காலத்தைக் கொண்ட கண்டு பிடிப்பாக அது இருக்கும்.

குதத்திலிருந்து எடுக்கப்பட்ட 113 மணி நேரத்துக்குப் பின்னர் நீங்கள் விந்துவைக் கண்டு பிடிப்பது மிக மிக அரிதாகும். இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு தரப்பு அவரிடம் காண்பித்த 1997ம் ஆண்டு கட்டுரை ஒன்று குறித்து அவர் அவ்வாறு கூறினார்.

“அந்த வழக்கும் 1982ம் ஆண்டு வழக்கு ஒன்றும்  (65 மணி நேரத்துக்குப் பின்னர் விந்து மீட்கப்படலாம் எனக் கூறப்பட்டது ) ஆகிய இரண்டு சம்பவங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்ட விஷயங்களாகும். 99.9 விழுக்காடு வழக்குகளில் அவ்வளவு நீண்ட நேரத்துக்குப் பின்னர் நீங்கள் விந்துவைக் கண்டு பிடிக்க முடியாது.”

“அன்வார் வழக்கில் மட்டுமே, 56 மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பின்னர் ரசாயன நிபுணரிடம் கொடுக்கப்பட்ட மாதிரியிலிருந்து நீங்கள் நல்ல மரபணு ஆதாரத்தை எடுக்க முடிந்திருப்பது, எனக்குத் தெரிந்த வரை  உலகில் இந்த வழக்கில் மட்டுமே”, என அவர் சொன்னார்.

மறு விசாரணையின் போது ராம் கர்பால் சிங் தொடுத்த கேள்விகளுக்கு மெக்டொனால்ட் பதில் அளித்தார்.

தமக்கு தெரிந்த வரையிலும் சில சஞ்சிகைகளில் வெளியான தகவல்கள் அடிப்படையிலும் குதத்திலிருந்து எட்டு மணி நேரம் வரையில் நீங்கள் நல்ல மரபணுவைக் கண்டு பிடிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.