இரண்டாம் நிலை பக்காத்தான் தலைவர்கள் போராடும் வலிமையைப் பெற்றுள்ளனர்

“பிஎன் -னைப் போல் அல்லாது பக்காத்தான் தலைவர்கள் அமைதியாக எளிதாக ஒய்வு பெற்று விடலாம். காரணம் அவர்களிடம் நல்ல இளம் தலைவர்கள் உள்ளனர்.”

பக்காத்தான் முதியவர்களுக்கும் 13வது பொதுத் தேர்தல் ஜீவ-மரணப் போராட்டம்

அடையாளம் இல்லாதவன் #58458950: அண்மையில் நான் டிஏபி செராமா ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கிருந்த இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டனர். தேவைப்படும் போது தலைமைத்துவப் பொறுப்பை அவர்கள் எளிதாக ஏற்றுக் கொள்வர்.

அவர்கள் படித்தவர்கள், அறிவாளிகள். பிஎன் -னில் இருப்பவர்களைக் காட்டிலும் மாறுபட்டவர்கள். சிறந்த திறமையுடையவர்கள். ஆகவே நடப்புத் தலைவர்கள் நாளை ஒய்வு பெறுவது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நிச்சயம் பக்கத்தான் பாதுகாப்பான கரங்களில் இருக்கும்.

தாய்கோதாய்: பிஎன் -னைப் போல் அல்லாது பக்காத்தான் தலைவர்கள் அமைதியாக எளிதாக ஒய்வு பெற்று விடலாம். காரணம் அவர்களிடம் நல்ல இளம் தலைவர்கள் உள்ளனர். இரண்டாம் நிலை பக்காத்தான் தலைவர்கள் போராடும் வலிமையைப் பெற்றுள்ளனர் ஆனால் பிஎன், ஐஸ் கீரிமை விட மெதுவானது. அதற்கு பிஎன் -னுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

பல இனம்: மசீச தலைவர் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கிறார். நமது தலைவர்களுடைய வயது ஒரு பொருட்டல்ல. நாட்டை மேம்படுத்துவதற்கு அவர்கள் காட்டும் நேர்மையும் உண்மையுமே முக்கியம்.

பக்காத்தானுக்கும் பிஎன் -னுக்கும் இடையில் ஒப்பு நோக்குவதற்கு உண்மையில் எதுவுமே இல்லை. பக்காத்தான் வேட்பாளர்கள் தங்கள் பிஎன் சகாக்களைக் காட்டிலும் எவ்வளவோ  முன்னுக்கு நிற்கின்றனர்.

எக்ஸ்wfw: சுவா அவர்களே, உங்கள் கட்சி சீன சமூகத்தை பிரதிநிதிப்பதை அடித்தளமாகக் கொண்டுள்ளது. நீங்கள் சிறு நடுத்தர தொழிற்சங்கங்கள் பற்றி ஆய்வு ஏதும் நடத்தினீர்களா?

பல மசீச பேராளர்கள் நிராகரிக்கப்பட்டது அல்லது ஒதுக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா ? உங்கள் சமூகத்தின் வர்த்தகத் துறையே மசீச-வின் வலிமையாகும். ஆகவே இப்போது என்ன சொல்வது?

நீங்களும் பிஎன் -னும் இன்னும் எல்லாம் வழக்கம் போலவே இருப்பதாகக் கனவு காண்கின்றீர்கள். உங்களிடம் ஹுடுட் ஒன்றைத் தவிரப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமை சிக்க வைப்பதில் உங்கள் நேரம் போய் விடுகின்றது.

ஆனால் அது யாருடைய தரத்தில்? அது பிஎன் தரமாக இருந்தால் நிச்சயம் காலித்துக்கு ஏ தேர்ச்சிதான்.

முஷிரோ: அடுத்த பொதுத் தேர்தல் அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் ஜீவ மரணப் போராட்டம்தான். பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் அம்னோவும் பிஎன்-னும் சிதறிப் போகும்.

அமுதசுரபிகளும் காமதேனுக்களும் இல்லாவிட்டால் அம்னோ- பிஎன் தலைவர்கள் உயிர்வாழ முடியாது. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்து கஷ்டமான வாழ்க்கையை அனுபவிக்கும் வலிமையும் அவர்களுக்குக் கிடையாது.

ஒங்: அடுத்த மசீச வேட்பாளர்களை கீழறுப்புச் செய்ய வேண்டாம் என சுவா தமது கட்சிப் பேராளர்களையே மன்றாடிக்  கேட்டுக் கொண்டுள்ளார். அது மசீச-வைப் பற்றி என்ன சொல்கிறது. இதை விட பரிதாபகரமான நிலைமை இருக்க முடியாது.

 

 

 

TAGS: