“கௌரவமில்லாத சுயநலவாதிகள் சிலர் உங்களை மருட்டியிருக்கலாம். வில்லனாகவும் சித்தரித்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மலேசியர்கள் உங்களுக்கு எப்போதும் நன்றி கூறுவர்.”
அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார்
லம்போர்கினி: பெர்சே துணைத் தலைவர் எஸ் அம்பிகா அவர்களே, சாதாரண மலேசியருடைய உரிமைகளுக்காக விருப்பு வெறுப்பின்றி சுயநலமில்லாமல் துணிச்சலுடன் நீங்கள் அயராமல் நடத்திய போராட்டத்துக்காக உங்களுக்கு என் வணக்கம்.
கௌரவமில்லாத சுயநலவாதிகள் சிலர் உங்களை மருட்டியிருக்கலாம். வில்லனாகவும் சித்தரித்திருக்கலாம். ஆனால் அமைதியை விரும்பும் நாட்டுப் பற்றுள்ள பெரும்பான்மை மலேசியர்கள் உங்களுக்கு எப்போதும் நன்றி கூறுவர்
உங்களுக்கு நிபுணத்துவமும் விருப்பமும் உள்ள துறைகளில் உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உங்களை இறைவன் எப்போதும் பாதுகாப்பான்.
கொதிக்கும் மண்: மேடம், நீங்கள் வெற்றி அடைந்துள்ளீர்கள். தேர்தல் சீர்திருத்தத்துக்கான சின்னமாக நீங்கள் இப்போது கருதப்படுகின்றீர்கள். இந்த நாட்டின் நன்மைக்காக தொடர்ந்து இணைத் தலைவராக இருப்பது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
விடுதலை நீதி ஆகியவற்றுக்கான போராட்டத்தில் உங்களுடன் இணைந்து கொள்ள பெரும்பாலான மலேசியர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர் என நான் நம்புகிறேன்.
ஆர்ஆர்: அன்புள்ள அம்பிகா, மதம் மாற்றம் மகளிர் உரிமைகளாகிய பிரச்னைகளுடன் நீங்கள் நாடற்ற மக்களுடைய குறிப்பாக இந்த நாட்டில் பிறந்தும் குடியுரிமை இல்லாத இந்தியர்களுடைய குடியுரிமைப் பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும்.
அவர்களில் சிலர் தாத்தா பாட்டிகளாகக் கூட உள்ளனர். அவர்களுக்கு நிரந்தர வேலைகள் இல்லை. பள்ளிக்கூடங்களுக்குப் போக முடியாத பிள்ளைகளுடன் வறுமையில் வாடுகின்றனர். அந்தத் துறையில் எல்லா அரசியல்வாதிகளும் மோசமாகத் தோல்வி கண்டுள்ளனர்.
உங்களை நேசிக்கிறோம்: அந்தப் போராட்டாத்தைத் தொடர நீங்கள் எங்களுக்குத் தேவை. இது ஒரு தொடக்கமே. பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தாலும் அதனைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் முடிவை மறுபரிசீலினை செய்வீர்கள் என நான் பிரார்த்திக்கிறேன். மலேசியாவுக்கு நீங்கள் தேவை.
அமைதியாளர்: அடுத்து அம்பிகா நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். மக்கள் நன்மைக்காக அச்சமில்லாத பகுத்தறிவு உள்ள உங்கள் குரல் அந்த அவையில் ஒலிக்க வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்#62163581: போராடுவதற்கு பொருத்தமான இன்னும் பல விஷயங்கள் இருந்தாலும் அம்பிகா விலக முடிவு செய்துள்ளது எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.
சிவில் சமூகம் என்ன செய்ய முடியும் என்பதை அவரது ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வெகு காலம் பிடித்தது. பெர்சே எங்களை ஒருமுகப்படுத்தியது. அந்தத் தீபத்தை ஏற்றுவதில் அம்பிகா முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அந்தத் தீபம் ஒவ்வொரு பெர்சே ஆதரவாளர் உள்ளத்திலும் அணையாமல் எரிய வேண்டும். தலைமைத்துவத்தை இன்னொருவர் ஏற்றுக் கொள்ள அம்பிகா அனுமதித்துள்ளார். கௌரவமாக வெளியேற முடிவு செய்துள்ளார். மிக்க நன்றி அம்பிகா.
மாட் சாலே1: 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விலக அம்பிகா திட்டமிட்டுள்ளது குறித்து பலர் ஏமாற்றம் அடைந்துள்ளது எனக்குப் புரிகிறது. ஆனால் அவர் ஒரு சவாலை விடுத்துள்ளார்.
மலேசியர்களே உங்களுக்கு மாற்ற வேண்டுமா? அதனைச் செய்யுங்கள். மற்றவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டாம்.
கடந்த 20 ஆண்டுகளாக நான் இந்த நாட்டில் வசித்து வருகிறேன். நல்ல சிந்தனைகளைக் கொண்டவர்கள் உட்பட பல மலேசியர்கள் ‘ஆழ்ந்த உறக்கத்தில்’ இருக்கின்றனர் என நான் கூற முடியும்.
நீங்கள் விரும்பும் மலேசியா டொமினோ பிஸாவைப் போன்று உங்கள் வீட்டுக்கு வராது. ஒரு தலைவரை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த நிலைமையை நீங்கள் மனப்பூர்வமாக அறிந்து கொண்டால் புதிய தலைவரை(கள்) உருவாக்குங்கள்.
அடையாளம் இல்லாதவன்: தயவு செய்து பெர்சே-யிலிருந்து விலக வேண்டாம். புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றுமானால் அதன் கொள்கை அறிக்கை அமலாக்கப்படுவதை உறுதி செய்யும் மூன்றாம் சக்தியாக பெர்சே விளங்க முடியும்.
அந்த எட்டுக் கோரிக்கைகளையும் அமலாக்காமல் பிஎன் வெற்றி பெற்றால் நாம் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
குவீனி: அம்பிகா மிக்க நன்றி. எனக்கு உங்கள் தந்தையைத் தெரியும். அவர் கௌரவமான மனிதர். நாட்டுக்கு நிறையச் செய்துள்ளார். அவரது நல்ல மரபணுக்கள் உங்களிடமும் உள்ளன. நீங்கள் விலகுவதைக் கண்டு ஆட்சியில் உள்ள பலரும் அவருடைய சேவகர்களும் குறிப்பாக தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.
அதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் உங்களைக் கண்டு அஞ்சியதுதான்.