வேறு விதமாக நிரூபிக்கப்படும் வரையில் அது மனித அஸ்தியைத் திருடிய சம்பவமே

 “இது மனித, சமய உரிமைகளைப் பயங்கரமாக மீறியதாகும். அத்தகையை விவகாரங்களைத் தீர்ப்பதற்கு நடைமுறைகளும் ஆவணங்களும் இருக்க வேண்டும்.”

 “அஸ்தியை பறித்துச் சென்றதாக” JAIPP மீது போலீஸ் புகார்

முன்னேற்றம்: பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் பினாங்கில் ‘அஸ்தியை பறித்துச் சென்ற’ சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாநில அரசாங்கத்தின் நிலை என்ன? பினாங்கு முதலமைச்சருடைய நிலை என்ன? டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவற்றின் நிலைதான் என்ன?

இது மிகவும் உணர்வைத் தூண்டும் விஷயமாகும். அது மிகவும் கவனமாக முடிவு செய்ய வேண்டும்.  இது மனித, சமய உரிமைகளைப் பயங்கரமாக மீறியதாகும். பினாங்கில் உள்ள பல்வேறு சமய தரப்புக்களுடன் விவாதம் நடத்தி அத்தகைய விஷயங்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளை சிவில் நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும் அல்லது முடிவு செய்ய வேண்டும்.

எம் நாகம்மா முஸ்லிம் என்றால் JAIPPக்கு (பினாங்கு இஸ்லாமிய விவகாரத்துறை) அவருடைய அஸ்தியை எடுத்துச் செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு அல்ல. நிச்சயம் தன்மூப்பாக அல்ல.

லாக்கர் 123: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவர்களே, அந்த அஸ்தியை உடனடியாகத் திருப்பிக் கொடுக்குமாறு JAIPPக்கு நீங்கள் ஆணையிடப் போவதில்லையா? பத்து உபான் மலாய்க்காரர்களின் மாபெரும் வீரரே, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மலாய் சிறுமிக்காக போராடியவரே இதற்கும் நீங்கள் போராட வேண்டாமா?

வீரா: லாக்கர் 123 அவர்களே பினாங்கில் இஸ்லாமிய நடைமுறைகள் மீது மாநில அரசுக்கு நிர்வாக உரிமை ஏதுமில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?

பினாங்கில் சுல்தான் இல்லாததால் அங்கு அகோங் தாம் மாநில இஸ்லாமியத் தலைவர். லிம் JAIPPக்கு நிர்வாக ஆணையை வெளியிட முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.

டாசின்: சமய  விவகாரங்கள் மாநில அரசின் கீழ் வருகின்றன. ஆகவே இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆட்சி மன்ற உறுப்பினர் அப்துல் மாலிம் அபுல் காசிமே அதற்குப் பொறுப்பு. அதனைத் தொடர்ந்து பினாங்கு கவர்னரின் ஆளுமைக்கு அது உட்படுகின்றது.

மாநில அரசு இதனை எப்படிக் கையாளப் போகிறது என்பதைப் பார்ப்போம். அந்த விஷயத்தை இந்தியர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.  (நாங்கள் இரண்டு மில்லியன் எண்ணிகையைக் கொண்ட சிறுபான்மையினர்) அடுத்து நாங்கள் 13வது பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்வோம்.

ராமச்சந்திரன் முனியாண்டி: மசீச என்ன செய்து கொண்டிருக்கிறது? அதன் தலைவர் சுவா சொய் லெக், ஹுடுட் பற்றி எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறார். ஹுடுட்டை ஆதரிப்பதாக டிஏபி-யையும் பாஸ் கட்சியையும் சாடிக் கொண்டே இருக்கிறார்.

எல்லா இஸ்லாமிய விவகாரத் துறைகளையும் அம்னோ தன் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவர் ஏன் JAIPP-யைக் கண்டிக்கக் கூடாது?

அத்துடன் காலஞ்சென்றவருடைய வரலாறும் தெரியவில்லை. அவர் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்னரோ மதம் மாறினாரா?

பிள்ளைகள்  JAIPP அலுவலகத்துச் சென்று தாயாரின் பதிவுகளைச் சோதிக்க வேண்டும். பிறப்பு இறப்புப் பதிவகமும் விவரங்களை வைத்திருக்கலாம்.

அடையாளம் இல்லாதவன் #19098644: முறையான சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லாவிட்டால் நடந்தது, மனித அஸ்தியை திருடிய சம்பவமாகும்.

தெமங்கோங்: சடலத்தை பறித்துச் செல்வது ஒரு விஷயம். ஆனால் அவர்கள் இப்போது அஸ்தியையும் பறித்துச் செல்கின்றனரா?

பீரங்கி: சமய அதிகாரிகள் நடத்தும் ‘சடலத்தை பறிக்கும்’ சம்பவங்களுடைய இலக்கு இந்தியர்கள் அல்ல.

இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுடைய நலன்கள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மற்ற சமூகங்களிடமிருந்து மலாய்க்காரர்களை பிரித்து வைக்கும் சுவரை அப்படியே வைத்திருந்து மலாய்க்காரர்களை அதற்குள் பூட்டி வைப்பதே அவர்களுடைய வேலை.

மலாய்க்காரர்களுடைய சிந்தனைகளை கட்டி வைப்பதே அவர்கள் நோக்கம். ஒரு முறை முஸ்லிமானால் அவர் எப்போதும் முஸ்லிம்தான்.

ஹாங் துவா: முஸ்லிம் நல்லடக்கத்திற்காக உயிரற்ற சடலங்களையும் அஸ்தியையும்  பறித்துச் செல்வது மதம் மாறிய ஒருவரை முஸ்லிமாக்கி விடாது. உண்மையில் அது நேர விரயம்.  துக்கத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்துக்கு மேலும் துயரத்தையே அது கொண்டு வரும்.

நான் ஒரு முஸ்லிம். இது சரி அல்ல என நான் நினைக்கிறேன்.

 

TAGS: