புரட்சி படையால் வீழ்த்தப்பட்டது: சிரியா இராணுவ ஹெலிகாப்டர்

டமாஸ்கஸ்: சிரியாவில், இராணுவத்தினருக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் சிரியா இராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சிரியாவில், அதிபர் அல் பஷார் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை ஏவி விட்டு, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறார் அதிபர் ஆசாத். நேற்று முன்தினம் மட்டும், தராயா நகரில், 300க்கும் மேற்பட்டோர், இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலும், நகரங்களிலும் இராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தினர்.ஈராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம், அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. புரட்சிப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

நேற்று அதிகாலை முதல் தொடர்ந்த இந்தத் தாக்குதலில், இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு நடுவானில் தீ படித்தபடி தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டர் கபூன் நகரில் உள்ள மசூதி ஒன்றின் அருகில் விழுந்துள்ளது.