அனைத்துலக நிலையில் மலேசியாவின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக யூத சார்புடைய ஆலோசகர் நிறுவனத்தின் சேவையை தமது நிர்வாகம் நியமித்ததற்கான காரணத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என பிகேஆர் இன்று கோரியுள்ளது.
அண்மையில் யுஎஸ் கார்டியன் பத்திரிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட கட்டுரையாளர் ஜோசுவா டிரெவினோவுடன் வேலை செய்வதற்குப் பதில் அவரை அரசாங்கம் ‘வெகு காலத்துக்கு முன்பே நீக்கியிருக்க வேண்டும்’ என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறினார்.
FBC Mediaவுக்கு ஒர் ஆலோசகராக பணியாற்றிய டிரெவினோ ‘மிகவும் பிரபலமான யூத ஆதரவு ஏஜண்ட் என்பதே அதற்குக் காரணம் ஆகும்.
‘அனைத்துலக அளவில் மலேசியாவின் தோற்றத்தை உயர்த்துவதற்காக’ அரசாங்கம் 2007ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான குத்தகைக்காக FBC Mediaவுக்கு 19.6 மில்லியன் ரிங்கிட் யூரோவை (84 மில்லியன் ரிங்கிட்) கொடுத்துள்ளது.
“அரசாங்கம் அந்த ஆலோசகரை நியமிக்கிறது. அதே வேளையில் என்னை ‘இஸ்ரேலியச் சார்பு அரசியல்வாதி’ எனக் குற்றம் சாட்டுவது வினோதமாக இருக்கிறது,” என்றும் சைபுதின் சொன்னார்.
2011ம் ஆண்டு டிரெவினோ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா பகுதிக்குச் செல்லும் உதவிக் கப்பல்களில் உள்ள அமெரிக்கர்களை இஸ்ரேலியப் படைகள் சுட்டால் தாம் உட்பட பெரும்பாலான அமெரிக்கர்கள் ‘அமைதியாக’ இருப்போம் என தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவானது.
FBC Media-வும் டிரெவினோவும் ‘தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்’ என நஜிப் கருதினால் பேச வேண்டும் என்றும் சைபுதின் கேட்டுக் கொண்டார். காரணம் அதில் அரசாங்க நிலையும் சம்பந்தப்பட்டுள்ளது.
‘அனைத்துலக ஊடகங்கள் கண்டித்துள்ள ஒரு நிறுவனத்துடனும் அதன் ஆலோசகர்களுடனும் ஏன் அரசாங்கம் வேலை செய்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்
அரசாங்க பண உதவியுடன் மலேசியா மீது FBC Media தயாரித்த விளக்கத் திரைப்படங்களை தெரியாமல் ஒளிபரப்பியதற்காக பிபிசி என்ற பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் ஏற்கனவே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
சிஎன்பிசி என்ற அனைத்துலகச் செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட FBC Media மலேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சிகளை தயாரிக்கிறது என்ற கவலையைத் தொடர்ந்து அது தயாரித்த ‘World Business’ நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் நிறுத்தி விட்டது.
அந்த ‘World Business’ நிகழ்ச்சிக்கு 2000 ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை FBC Media தலைவர் ஜான் டெப்டிரியோஸ் உபசரணையாளராக இருந்தார்.
ஆனால் 2011ம் ஆண்டு ஜுலை மாதம் டெப்டிரியோஸ் நஜிப்-பை பேட்டி கண்டதை சிஎன்என் செய்தி நிறுவனம் தற்காத்தது. காரணம் டெப்டிரியோஸ் அந்தச் சமயத்தில் FBC Media-வை விட்டு விலகி விட்டார் என்று சிஎன்என் கூறியது.