“பொய்யான” குற்றப் புள்ளி விவரங்கள் பற்றிய கடிதத்தை “போலீஸ்காரர் எழுதவில்லை”

குற்றப் புள்ளிவிவரங்களைப் போலீஸ் தில்லுமுல்லு செய்துள்ளதாக கூறிக் கொள்ளும் அனாமதேயக் கடிதத்தை போலீஸ் படையைச் சாராத ஒருவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு புக்கிட் அமான் போலீஸ் செயலக (பொது உறவு) உதவித் தலைவர்  ராம்லி முகமட் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் துல்லிதமல்லாத பல விஷயங்கள் காணப்படுவதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.

“அந்தக் கடிதத்தில் காணப்படும் பல தவறுகள் அடிப்படையில், அதனை எழுதியவர் போலீஸ் படையைச் சார்ந்தவராக இருக்க முடியாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். போலீஸ் நடவடிக்கைகள், குற்றப் புலனாய்வு நடைமுறைகள், குற்றவியல் சட்டம் ஆகியவை பற்றி நம்பத்தகுந்த வேவுத் தகவல்களும் அதில் இல்லை,” என்றார் ராம்லி.

‘இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த ‘அனாமதேய போலீஸ் அதிகாரியின்’ கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மறுத்து அவர் வெளியிட்ட 11 அம்சங்களின்  இறுதியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்கள் குறைந்துள்ளன என கூட்டரசு அரசாங்கத்தைத் திருப்தி செய்வதற்காக குற்றப் புள்ளிவிவரங்களில் போலீசார் வேண்டுமென்றே தில்லுமுல்லு செய்திருப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

வீடுகளை உடைத்துத் திருடுவது (burglary), கொள்ளை (robbery), ‘காயம் விளைவிப்பது’ (“causing hurt”) ஆகியவை- அந்தக் குற்றச் செயல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்- பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் போலீசார் அட்டவணைக் குற்றங்கள் (“index crime”) என அழைக்கும் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை என அந்தக் கடிதத்தை எழுதியவர்  கூறிக் கொண்டுள்ளார். அவை குற்றவியல் சட்டத்தின் வேறு பிரிவுகளைப் பயன்படுத்தி அட்டவணை அல்லாத குற்றங்கள் ( ‘non-index crime’) என்ற பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் அவர் சொல்லிக் கொண்டார்.

அதன் வழி அரசாங்கத்தின் முக்கிய அடைவு நிலைக் குறியீட்டு இலக்குகளுக்கு ஏற்ப குற்றச் செயல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காட்டும் வகையில் தேசிய குற்றப்புள்ளி விவரங்கள் சரி செய்யப்படுகின்றன என்றும் அந்த எழுத்தாளர்  சொல்லிக் கொண்டார்.

வீடுகளை உடைத்து திருடுவது, கொலை ஆகிய வன்முறைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களை போலீசார் அட்டவணைக் குற்றங்கள் (“index crime”) என்றும் சூதாட்டம், மோசடி போன்ற வன்செயல் இல்லாத குற்றங்களை அட்டவணை அல்லாத குற்றங்கள் ( ‘non-index crime’) என்றும் போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

அட்டவணை அல்லாத குற்றங்கள் எண்ணிக்கையும் குறைந்து வருவதைப் புள்ளி விவரங்கள் காட்டுவதால் அந்த எழுத்தாளர் கூறியுள்ள தகவலும் தவறானது என்றும் ராம்லி சொன்னார்.

2009ம் ஆண்டுகளின் மத்தியில் அரசாங்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அறிமுகம் செய்தது முதல் அட்டவணைக் குற்றங்கள், அட்டவணை அல்லாத குற்றங்கள் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

TAGS: