விட்டுக் கொடுக்க வேண்டாம், உத்துசான் போண்டியாகும் வரை வழக்குப் போடுங்கள்

“அவர்கள் விதி விலக்குப் பெற்றவர்களைப் போல, யாரும் தொட முடியாதவர்கள்  என்பதைப் போல பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும்  போடுகின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டி விடும் தேசத் துரோக கட்டுரைகளை வெளியிடுகின்றனர்.”

உத்துசான் ஆசிரியர் கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டார்

லின் வென் குவன்: சமய, இனப் பகை உணர்வுகளைத் தூண்டுகின்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதும் தனது போக்கிற்கு உத்துசான் விலை கொடுக்கும் வரை அந்த வழக்கை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தொடர  வேண்டும்.

செய்தி ஆசிரியர் சுல்கிப்லி ஜலில் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்கலாம். ஆனால் அதுதான் உத்துசானின் தீய பண்பாடு. இந்த நாட்டில் ஏற்கனவே நலிவடைந்துள்ள இன, சமய, சமூக உறவுகளை மேலும் கீழறுப்பதற்கு அவரைப் போன்ற பல புழுக்கள் உத்துசானிடம் உள்ளன.

தங்களைத் தொட முடியாது என்ற எண்ணத்தில் மறைமுகமான அம்னோ ஆதரவுடன் அவ்வப்போது தேச நிந்தனைக் கட்டுரைகளை வெளியிடும் அவர்கள் மன்னிப்புக் கேட்பதாக கருத வேண்டாம்.

மாற்றம்: டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கு இழப்பீடாக 10 மில்லியன் ரிங்கிட் கொடுங்கள். அது எப்படி இருந்தாலும் நமது வரிப்பணம். அந்தப் பணம் இன்னொரு அம்னோ சேவகர் பைகளுக்குச் செல்வதைக் காட்டிலும் தாம் பொருத்தமானது எனக் கருதும் வழிகளில் அதனை கர்பால் செலவு செய்யட்டும்.

ஹாங் துவா பிஜே: விட்டுக் கொடுக்க வேண்டாம், உத்துசான் திவாலாகி பொய்களை அச்சிட  முடியாத நிலை ஏற்படும் வரை அது பணம் கொடுப்பதை உறுதி செய்யுங்கள்.

அடையாளம் இல்லாதவன்1234@: சுல்கிப்லி முட்டாள்தனமாக பேச வேண்டாம். இஸ்லாமிய நாட்டை எதிர்ப்பது நாட்டின் சமயமாக இஸ்லாத்தை நிராகரிப்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

பிஎன் -உடன் தொடர்புடைய அந்த சேவகர் எந்த அளவுக்கு முட்டாள் என்பதை அது காட்டுகின்றது.

நீங்கள் அந்த அறிக்கைகளை மலாய்க்கு மொழியாக்கம் செய்தாலும் அவை உத்துசான் வெளியிட்டது போன்று இருக்க முடியாது. இது முழுக்க முழுக்க கெட்ட நோக்கம் கொண்டது.

2ம் தலைமுறை: பொய் சாட்சி சொல்வதையே திருக்குர் ஆன் ஹராம் என்கிறது. ஆனால் அதனை உத்துசான் தொடர்ந்து செய்து வருகின்றது. இருந்தும் அதன் ஆசிரியர்கள் தங்களை நல்ல முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். அத்தகைய மக்களுக்கு திருக்குர் ஆனில் இன்னொரு சொல் உள்ளது. அது தான் munafik.

அவதார்1: மலாய்க்காரர்கள் அந்தக் கட்டுரையை உண்மையெனக் கருதி- இனக் கலவரங்கள் மூண்டால்.. அந்த ஆசிரியர் மன்னிப்புக் கோருவது ஏற்பட்ட குழப்பதை நியாயப்படுத்தி விடுமா ? நேர்மையுடனும் தொழில் ரீதியாகவும் இயங்க வேண்டும் என்ற பாடத்தை உத்துசான் கற்றுக் கொள்ள வேண்டும்.

சராஹுன் ஹுடா: கர்பால் அவர்களே மன்னிப்புக் கேட்பதற்கு இசைந்து விடாதீர்கள். அது நாளை மூடப்படும் வரையில் உத்துசானை தண்டியுங்கள். தயவு செய்து இரக்கம் காட்ட வேண்டாம். அவர்கள் அன்று ஆட்டம் போட்டனர். இன்று உங்கள் தினம்.

சுவர் கண்ணாடி: அவர்கள் விதி விலக்குப் பெற்றவர்களைப் போல யாரும் தொட முடியாதவர்கள் என்பதைப் போல பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும்  போடுகின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டி விடும் தேசத் துரோக கட்டுரைகளை வெளியிடுகின்றனர். 

அந்த நாளேட்டின் உரிமையாளர்கள் பின்பற்றும் இனவாதப் போக்கையும் வெறுப்புணர்வு விதைகளை விதைப்பதே அவர்கள் நோக்கம் என்பதையும் அது காட்டுகிறது. திறமையற்ற ஆட்சி தனது இறுதிக் கட்டத்தில் இருப்பதற்கான அறிகுறிகளே அவை.

அடையாளம் இல்லாதவன் #55961902: எதிர்க்கட்சிகள் பற்றி குறிப்பாக இஸ்லாத்துக்கு எதிரானது, மலாய்க்காரர்களுக்கு எதிரானது என தாங்கள் கருதிக் கொள்ளும் டிஏபி குறித்து பொய்களைச் சொல்வதும் செய்திகளைத் திரிப்பதுமே தங்கள் கடமை என்பதை உத்துசான் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக் ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளார்.

அதனைச் செய்வதற்கு உத்துசான் ஆசிரியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஊதியம் கொடுக்கப்படுகிறது. எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் கர்பால் சிங்-கிற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை ஈடு கட்ட முடியாது.

நீதிமன்றம் மற்றவர்கள் மீது வார்த்தைகளைத் திணித்து அவர்கள் சொன்னதாக செய்தி வெளியிட்டதாக அந்த எழுத்தாளர் மீது குற்றம் சாட்டி அவரை ஜெயிலில் அடைக்க வேண்டும். இனிமேல் அது போன்று கட்டுரைகளை எழுதுகின்றவர்களுக்கு அது ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும்.

அன்பழகன்_2187: நாம் இங்கு ஒர் உண்மையை உணர வேண்டும். நீதிமன்ற நடவடிக்கை ஆபத்தான செய்திகளை உத்துசான் வெளியிடுவதை நிறுத்தி விடும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?

பக்காத்தான் ராக்யாட்டுக்கு எந்த வழியிலாவது கூடின பட்சம் சேதத்தை ஏற்படுத்தத் தீவிரமாக முனைந்து வருகிறது. அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது குழுவினரும் அனுமதி அளித்துள்ளனர். அதற்கு எல்லா அரசாங்க அமைப்புக்களும் ஆதரவு அளிக்கின்றன.

10 மில்லியன் ரிங்கிட் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டாலும் அது உத்துசானுக்கு வெறும் கொசுறுதான். காரணம் ஏழை மக்களிடமிருந்து ஊழல் வழிகளில் திரட்டப்பட்ட பணத்தையே அம்னோ அந்த ஏட்டுக்கு நிதியாக அளித்து வருகின்றது. அது அம்னோ ஏடு இல்லை என்றால் அது எப்போதோ நொடித்துப் போயிருக்கும்.

இது நாள் வரை அம்னோ/பிஎன் -னுக்கு ஆதரவாக தனது வாசகர்களைத் திருப்புவதற்கு அந்த ஏடு முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றது. பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அந்த முட்டாள்களை நிறுத்த முடியும்.

 

TAGS: