டாத்தாரானில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளில் தெளிவான எதிர்ப்பு

டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு நடைபெற்ற ‘Janji Demokrasi’ கூட்டத்துக்குச் சென்ற துணிச்சலான சரியான சிந்தனையைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்.”

தடை விதிக்கப்பட்ட போதிலும் மஞ்சள் சட்டைகள் டாத்தாரானை நிறைத்தன [காணொளி ]

மாற்றம்: விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமில்லை என டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைவர் ஜைனுடின் அகமட் நிருபர்களிடம் கூறினார். அத்துமீறல்கள் ஏதும் இருந்தால் நாங்கள் அவற்றை பின்னர் விசாரிப்போம்,” என மஞ்சள் சட்டைகள் பற்றி வினவப்பட்ட போது அவர் சொன்னார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமில்லை. ஆனால் பின்னர் அவர் விசாரிப்பார். மலேசியப் போலீசாருக்கு நிறைய நேரம் இருப்பதாகத் தெரிகிறது.

குவிக்னோபாண்ட்: மலேசியாகினி அறிவித்த நேரடி செய்திகளின் கடைசிப் பகுதியில் ‘அத்துமீறல்கள்’ ஏதும் இருந்தால் அவற்றை விசாரிக்கப் போவதாக வெறுப்புணர்வோடு போலீஸ் சொன்னதாகக் கூறப்பட்டிருந்தது.  அது எனக்கு பின் வரும் கதையை நினைவுபடுத்தியது.

குடியேற்றக்காரர் ஒருவர் வேலை இல்லாமல் இருந்த போது உணவுக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். தவறுதலாக தமது கிரடிட் கார்டை கடை ஒன்றில் விட்டுச் சென்று விட்ட பெரிய மனிதர் ஒருவர் அந்தக் குடியேற்றக்காரரைக் கண்டதும் தமது கார்டை அவர் திருடி விட்டதாக போலீஸ்காரரிடம் சொன்னாராம்.

அந்த வழியாகச் சென்ற போது குழப்பத்தை விசாரித்த நல்ல மனிதர் ஒருவர் பெரிய மனிதருடைய கார்டைக் கண்டு பிடித்து அதனை அவருடைய கவனத்துக்கும் போலீஸ்காரருடைய கவனத்துக்கும் கொண்டு சென்றார். அந்தப் பெரிய மனிதர் சொன்னார்: “குடியேற்றக்காரர் என் கார்டை திருடியிருக்கிறார்”. அதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் அந்தக் குடியேற்றக்காரை நோக்கி,” நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். இல்லை என்றால் பிச்சை எடுத்ததாக அடுத்த முறை உங்கள் மீது குற்றப் பதிவு செய்து விடுவேன்,” என எச்சரித்தார்.

அதனால் ஆத்திரமடைந்த நல்ல மனிதர் குடியேற்றக்காரரிடம் மன்னிப்புக் கேட்குமாறு பெரிய மனிதரிடமும் போலீஸ்காரரிடமும் சொன்னதோடு பாகுபாடு காட்டுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார்.

மலேசியாவில் இன்றைய நிலையை அது எனக்கு உணர்த்துகிறது. நாட்டின் பாரபட்சமான போலீஸ் படை எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடிக்கின்றவர்களை நாட்டின் எதிரிகளாகக் கருதுவதுதான் அந்த நிலை.

இந்த தேசிய தினத்தன்று மலேசியர்கள் விழித்துக் கொண்டு அந்த அபத்தங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

கும்பல்1900: 10,000 என்பது மிகவும் மிகவும் அடக்கமான எண்ணிக்கை ஆகும். குறைந்தது 50,000 பேராவது இருக்க வேண்டும். மஞ்சள் உடையை அணியாதவர்களும் அந்த எண்ணிக்கையில் அடங்குவர். கூட்டத்தினர் அமைதியாக நடந்து கொண்டனர். மலேசியர்களே உண்மையில் அது சிறந்த காட்சி.

மலேசிய இனம்: டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு நடைபெற்ற ‘Janji Demokrasi’ கூட்டத்துக்குச் சென்ற துணிச்சலான சரியான சிந்தனையைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்.

கம்யூனிஸ்ட்கள், மார்க்கீசியவாதிகள், யூதவாதிகள், ஸ்டாலின்வாதிகள், மாவ்வாதிகள், ஏகாதிபத்தியவாதிகள் காலனித்துவவாதிகள், கலைஞர்கள், பல் மருத்துவர்கள், குகைவாதிகள் போன்ற அபாயகரமான கீழறுப்புச் சக்திகள் Janji Demokrasi அமைப்புக்குள் ஊடுருவியுள்ளனரா என்பதை நிர்ணயம் செய்ய முன்னாள் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் அல்லது மூசா ஹசான் தலைமையில் புதிய ‘புலனாய்வை’ போலீசார் இனிமேல் தொடங்குவர்.

அடையாளம் இல்லாதவன் #92005027: தூய்மையான தேர்தல்கள் வழி தேர்வு செய்யப்பட்ட நல்ல அரசாங்கத்தையே நாம் நாடுகிறோம். ஆகவே அந்தப் பேரணியில் நாம் கலந்து கொள்கிறோமா இல்லையா என்பது முக்கியமல்ல. தேர்தல் நிகழும் போது வாக்களிக்கும் நமது உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும்.

கீ துவான் சாய்: கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயகத்துக்கான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சி அரசியல்வாதிகளே கேட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் இப்போது நிகழ்ந்துள்ள ‘Janji Demokrasi’ கூட்டம் பற்றிய குறிப்பிடத்தக்க விஷயம் இதுதான். பல இனங்களையும் சார்ந்த  மக்கள் (அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள்) அந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுதான் அதுவாகும்.

அந்த வேண்டுகோள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து வராமல் மக்களிடமிருந்து வரும் போது ஆளும் கட்சிக்கு நடுக்கம் ஏற்படும். மாற்றத்துக்கான குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது. அது நிச்சயமானது. மகத்தானது.

பிஎன் சரணடைவது நல்லது. மலேசியர்கள் விடுதலை பெற்று உண்மையான மெர்தேக்காவை அடைவதற்கான காலம் கனிந்து விட்டது.

 

TAGS: