“நஜிப்பும் அவர் மனைவியும் கேலி செய்யப்பட்டனர்”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் படங்கள் மீது தமது குதத்தைக் காட்டிய பேரணி பங்கேற்பாளர் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என ‘Janji Demokrasi’ பேரணி ஏற்பாட்டாளர்கள் இன்று கூறியுள்ளனர். [காணொளி]

நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் கூடியிருந்த இடத்துக்கு எதிர்ப்பக்கத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது என Gabungan Janji பணிக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.

“நாங்கள் அத்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பதில்லை. இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. நாங்கள் அதனை முற்றாக ஆதரிக்கவில்லை,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

“நாங்கள் இது போன்ற நடத்தைக்கு ஊக்கமூட்டுவது இல்லை. பதாதைகளைக் கூட கொண்டு வர வேண்டாம் என நாங்கள் மக்களிடம் கூறியுள்ளோம்.”

“இணையத்தில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் அந்தச் சம்பவம் பற்றிய படத்தில் இருபது வயதான ஆடவர் ஒருவர், தமது டிரவுசரை இறக்கி நஜிப், நோஸ்மா, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் ஆகியோரது படங்களை நோக்கி தமது குதத்தைக் காட்டுகிறார்.”

அந்தப் படங்கள் தரையில் வைக்கப்பட்டிருந்தன. ‘Janji Bersih’என எழுதப்பட்ட சுவரொட்டியும் அங்கிருந்தது. அந்த நிகழ்வை அங்கு கூடியிருந்த மக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்வைக் கண்டு ஒருவர் கை தட்டுவதும் இன்னொருவர் படங்களை நோக்கி நடு விரலைக் காட்டுவதும் வீடியோவில் உள்ளன.

பிஎன் ஆதரவு வலைப்பதிவாளரான யூசேரி யூசோப் யூ டியூப் இணையத் தளத்தில் அந்த வீடியோவை சேர்த்துள்ளார்.

நஜிப், ரோஸ்மா படங்கள் மீது மக்கள் நடந்து செல்வதும் அதில் காணப்படுகின்றது.

நஜிப் படத்தை மிதித்தனர்

அவ்வாறு நடந்து சென்றவர்களில் பலர் மஞ்சள் உடை அணிந்திருந்தனர். சிலர் வேண்டுமென்றே அந்த படங்களை மிதிப்பதை அந்த வீடியோ காட்டியது. ஜாலான் ராஜா-ஜாலான் துன் பேராக் சந்திப்பில் அந்த வீடியோ பிடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

“இதனிடையே தமது டிரவுசரை இறக்கிய இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்னொரு பிஎன் ஆதரவு Gossip Rakyat (GR) என்ற வலைப்பதிவு கூறியுள்ளது.”

பொது இடத்தில் தனது டிரவுசரை இறக்கி  பிரதமருடைய படத்தை இழிவுபடுத்தும் அந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பக்காத்தான் ராக்யாட் அந்த இளைஞர்களில் ஒருவருக்கு பணம் கொடுத்ததாக Gossip Rakyat (GR)-க்குத் தெரிய வருகின்றது,” என்றும் அந்த வலைப்பதிவு குறிப்பிட்டது.

“GR அடுத்த கட்டுரையில் அவரது அடையாளத்தை வெளியிடும். காத்திருங்கள். நீங்கள் எங்கும் போக முடியாது. அதிகாரிகள் அதனை விசாரிப்பர் என நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அந்த வலைப்பதிவு குறிப்பிட்டது.

கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு 10,000 மக்களைக் கவர்ந்த ஜாஞ்சி டெமாக்கரசி (Janji Demokrasi) பேரணி இரவு 11 மணிக்கு தொடங்கியது.

அந்தப் பேரணி சட்ட விரோதமானது எனக் கூறும் கடிதம் நேற்று பிற்பகல் மணி 2.15 வாக்கில் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு போலீஸ் அனுப்பி வைத்தது.

அந்தப் பேரணி அமைதியாக முடிந்த போதிலும் 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் போலீசார் அதனை புலானய்வு செய்கின்றனர்.

அரசாங்கம் தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை அதற்கு நினைவூட்டுவதே பேரணியின் நோக்கமாகும்.

பிஎன் தேர்தல் பிரச்சார சுலோகமுமான ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கான அரசாங்கத்தின் அதிகாரத்துவ சுலோகத்தின் பாணியில் ஜாஞ்சி டெமாக்கரசி பெயரும் உருவாக்கப்பட்டது.

 

TAGS: