உத்துசான் சுயமாகவே வெடி வைத்துத் தகர்த்துக் கொள்கிறது

“உத்துசான் இயக்குநர்கள் வாரியம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பொறுப்பற்ற ஊழியர்கள் பங்குதாரர்களுடைய பணத்தை தொடர்ந்து வீணாக்குவதை அது அனுமதிக்கக் கூடாது.”

WWW1: நிஸாருக்கு இழப்பீடு கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு

அடையாளம் இல்லாதவன்#76681287: ஏதோ கோளாறு நிகழ்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் பிஎன் ஆதரவாளராக இருந்து வருகிறேன். உத்துசான் மலேசியா திரிக்கும் கதைகளில் எந்த நியாயமும் இல்லை.

நடுநிலை வாசகர்கள் எப்போதோ  உத்துசானைக் கைகழுவி விட்டனர். தீவிர ஆதரவாளர்கள் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ள வாசகர்கள். அப்புறம் ஏன் கதைகளை ஜோடிக்கின்றீர்கள் ? பிஎன் ஆதரவாளர்கள் மட்டுமே இன்னும் உத்துசான் மலேசியாவை வாசிக்கின்றனர். அவர்களை நம்ப வைப்பதற்கு நீங்கள் செய்திகளைத் திரிக்க வேண்டிய அவசியமே இல்லை.

அதே வேலையில் தொடர்ந்து கதைகளைத் திரிப்பதால் உத்துசான் எதிர்க்கட்சிகள் மெல்லுவதற்குத் தீவனத்தையே வழங்குகிறது. அல்லது தனக்குத் தானே பெருமை அடித்துக் கொள்கிறது. அல்லது எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

நான் எஜமானராக இருந்தால் கட்சிச் செய்திகளை நுட்பமாக எழுதும் வழிகள் குறித்த வகுப்புக்களுக்கு உத்துசானை அனுப்புவேன்.

ரூபி ஸ்டார்_4037: இந்த நாட்டில் மிகப் பெரிய நாளேடு உத்துசான். அது அந்த அவதூறு வழக்கிற்கு சட்டப் பேராளரை அனுப்பவில்லை. மக்களுக்கான அதன் நிறுவனப் பொறுப்பு என்ன ஆனது ?

அம்னோவும் பிஎன் சேவகர்கள் இன்னும் உத்துசானை தங்களது முகவர்களாக பயன்படுத்துகின்றனர்.

இந்த நாடு நீண்ட காலமாக முறைகேடாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. அதனால் நீதி என்பதே இல்லை.

லின் வென் குவான்: அவதூறு, இழப்பீடு ஆகியவற்றுக்கு அடிக்கடி பணம் கொடுக்க உத்துசானிடம் பெரிய பணப் பெட்டியே வைத்திருப்பதாகத் தெரிகிறது. உத்துசான் விற்பனை குறைகிறது அதனால் விளம்பர வருமானமும் சரிகிறது. மற்ற நாளேடுகளுக்கு அந்த நிலை ஏற்பட்டிருந்தால் அவை இன்னேரம் போண்டியாகி இருக்கும்.

ஆகவே உத்துசானுக்கு யார் ஞானத் தாயாக இருந்து ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பெரிய கேள்வி.

அர்கோனிஸ்ட்: முன்னள் பேராக் மந்திரி புசார் நிஸார் ஜமாலுதின் அவர்களே, டிவி3க்கு எதிரான வழக்கில் விட்டுக் கொடுக்க வேண்டாம்.

ஒரே மாதிரியான கட்சி சார்பு நிலையைக் கடைப்பிடிக்கும் ஆஸ்ட்ரோ கட்டணத்தை செலுத்த இயலாத ஏழை மக்கள் டிவி3 நிகழ்ச்சிகளையே பார்க்கின்றனர். அதனால் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

விளையாட வேண்டாம்: அந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு நிஸாரும் அவரது ஆதரவாளர்களும் இப்போது மகிழ்ச்சி அடைய முடியாது. உத்துசான் குற்றவாளி என்று மட்டுமே தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. தான் இல்லாத நேரத்தில் கூறப்பட்ட அந்தத் தீர்ப்பை தள்ளி வைக்குமாறு அது இன்னமும் விண்ணப்பிக்க முடியும். ஆகவே அந்த வழக்கில் அடுத்த மாற்றங்களுக்காக காத்திருப்போம்.

நிஸாருக்கு உத்துசானிடமிருந்து என்ன கிடைத்தாலும் WWW1 கார் எண் தகடு விஷயத்தில் ஜோகூர் சுல்தான் நிஸாரைக் கண்டித்த பின்னர் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை ஈடு கட்டவே முடியாது.

ஈப்போகிரைட்: பிஎன் -னுக்கு ஆதரவாக உத்துசான் பொய்யான செய்திகளைப் போடுவதால் அதன் மீது வழக்குகள் போடப்படுகின்றன.

ஒவ்வொரு வழக்கும் புர்சா மலேசியாவிடமும் பொது மக்களிடமும் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஆகவே உத்துசான் நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. உத்துசான் சுயமாகவே வெடி வைத்துத் தகர்த்துக் கொள்கிறது.

டாக்டர் சின் து லான்: இவ்வளவு அவதூறு வழக்குகளை எதிர்நோக்கும் ஒரு பத்திரிக்கையின் வெளியீட்டு அனுமதியை அரசாங்கம் ரத்துச் செய்வது பற்றிப் பரிசீலிக்காமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அடையாளம் இல்லாதவன்#40538199: உத்துசான் இயக்குநர்கள் வாரியம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பொறுப்பற்ற ஊழியர்கள் பங்குதாரர்களுடைய பணத்தை தொடர்ந்து வீணாக்குவதை அது அனுமதிக்கக் கூடாது.

 

TAGS: