கொடி மீது சர்ச்சை: உப்புச்சப்பில்லாத விஷயத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்பு?

“சுதந்திரத்துக்கு மற்றவர்களும் போராடியிருக்கின்றனர். அவர்கள் நமது வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவர்கள் நமது மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.”

ஜாலுர் கெமிலாங்கை மாற்ற நாங்கள் எண்ணவில்லை என்கின்றனர் கொடி இருவர்

கீ துவான் சாய்: நாம் உண்மையான வரலாற்றை மீட்க வேண்டும். வெற்றி பெற்ற தரப்பான அம்னோ எழுதிய அதிகாரத்துவ வரலாறு நம்மை தவறாக வழி நடத்த அனுமதிக்கக் கூடாது.

சுதந்திரத்துக்கு மற்றவர்களும் போராடியிருக்கின்றனர். அவர்கள் நமது வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவர்கள் நமது மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். அந்த நிலை மாற வேண்டும்.

அம்னோ உதயமாவதற்கு முன்னரே சுதந்திரத்துக்குப் போராடியவர்களுக்கு இடச்சாரிகள் தலைமை தாங்கினர். கம்யூனிஸ்ட்களையும் நாம் மறந்து விடக் கூடாது.

அம்னோவில் உள்ளவர்களை மட்டுமின்றி அனைவருடைய போராட்டத்தையும் மலேசியர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என அந்த இரண்டு இளைஞர்களும் விரும்பியது சரியே.

பெர்ட் தான்: நமக்கு தெரியாத வரலாற்றுப் பகுதியை எடுத்துக்காட்டிய இளம் வலைப்பதிவாளரான செரிகாலா செலாத்தானுக்கும் ஜைரி ஷாபாயி-க்கும் மிக்க நன்றி.

சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அந்த கால கட்டத்தை நமது நினைவிலிருந்து ஒதுக்கியவர்கள் யார் ? சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் யார்- அம்னோ மட்டுமா ?

நமக்கு உண்மையில் எதுவும் தெரியாது. நாம் அது குறித்துப் படித்ததும் இல்லை. ‘Sang Saka Malaya’ பற்றி நமது வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படிப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

மலாயாவுக்கு சுதந்திரம் கோரிய சுதந்திர போராட்ட வீரர்களைக் கொண்ட ஒர் அமைப்பின் சின்னமாக அந்தக் கொடி திகழ்ந்தது என்பது நமக்கு நிச்சயம் வியப்பைத் தந்திருக்கும். நாம் இழந்து விட்ட உண்மையான வரலாற்றின் ஒரு பகுதியை நமக்கு முன் கொண்டு வந்த சிந்தனை ஆற்றல் கொண்ட அந்த இளைஞர்களுக்கு எங்கள் வீர வணக்கம்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மலாயா ஒரு போதும் காலனியாக இருந்தது இல்லை என்றும் பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாகவே இருந்தது என்றும் கூறிய உயர்வான தேர்ச்சிகளைக் கொண்ட ‘kangkong professors’-களை (காங்கோங் பேராசிரியர்கள்) காட்டிலும் அந்த இளைஞர்கள் விவேகமானவர்கள். 

தொடர்ந்து உங்கள் நோக்கங்களை விளக்குங்கள். அப்போதுதான் பிஎன் அரசாங்கம் அதனை வேறு விதமாக கதை திரிக்க முடியாது.

மோசடிக்காரன்: எதிர்க்கட்சிகளும் அரசாங்க எதிர்ப்பாளர்களும் நாட்டைக் குடியரசாக மாற்ற விரும்புகின்றனர், தேசியக் கொடியை மாற்ற விரும்புகின்றனர், அரசமைப்பை திருத்த விரும்புகின்றனர், கிறிஸ்துவ மயமாக்க விரும்புகின்றனர் எனக் குற்றம் சாட்டுவது எல்லாம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அம்னோ செய்யும் முயற்சிகளாகும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவதே அதன் நோக்கம்.

உட்புறப் பகுதிகளில் உள்ள கிராமப்புற மலாய்க்காரர்கள் கண்களில் எதிர்க்கட்சிகளை மோசமாகக் காட்டி அம்னோவை அவர்கள் ஆதரிக்குமாறு செய்வது முதலாவதாகும். இன்னொரு சுற்று லாலாங் நடவடிக்கையை அமலாக்கி எல்லா பக்காத்தான் ராக்யாட் மூத்த தலைவர்களையும் 13வது தேர்தல் முடியும் வரை ஜெயிலுக்குள் அடைப்பதற்கான சூழலை உருவாக்குவது இரண்டாவதாகும்.

மேலே கூறப்பட்ட வழிகள் அம்னோ தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதையும் நாட்டின் மீது அதன் கட்டுப்பாடு என்றென்றும் நிலைத்திருப்பதையும் உறுதி செய்யும்.

டாக்டர் ஜெக்#04496187: இப்போது மலேசியர்கள் அம்னோபுத்ராக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்குப் போராடுகின்றனர். இதுதான் உண்மையான போராட்டம்.

அர்ச்சன்: எதிர்க்கட்சிகள் கொடியை மாற்ற விரும்புவதாக விவசாய, விவசாய அடிப்படை தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் கூறிக் கொண்டுள்ளார். அதனைக் கிளிப் பிள்ளையைப் போல உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் ஒப்புவித்துள்ளார். ஆனால் பிரதமர் நஜிப் ரசாக் சொல்வதுதான் மிகவும் மோசமானது.

எப்படி ஒரு பிரதமர் கண்மூடித்தனமாக குற்றம் சாட்ட முடியும் ? செரிகாலா செலத்தான் என்ற வலைப்பதிவாளர் சொல்வது சரியோ தவறோ தாம் செய்ததற்குப் பொறுப்பேற்றுள்ள அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.

சற்குணம் டியூசன் வாத்தியார்: பிரதமர் அவர்களும் அமைச்சர் ஹிஷாமுடின் அவர்களும்  விரைவாக எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது.

பெர்க்காசா அறிக்கைகள் பிஎன் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என நீங்கள் சொல்வதைப் போல பிஎன் -னை எதிர்க்கும் சில தனிநபர்கள் கூறும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளுடைய எண்ணங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிஎன் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மன முதிர்ச்சியை பெற வேண்டும். எதிர்க்கட்சிகள் கொடியை மாற்ற விரும்புகின்றன, குடியரசாக்க விரும்புகின்றன என உப்புச்சப்பில்லாத கருத்துக்களை வீசக் கூடாது.

தோல்வி பயம் உங்களைச் சூழ்ந்திருப்பதால் பின் -னுக்கு வாக்களிக்குமாறு மக்களை மிரட்டும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

தெலுர் டூவா: விரக்தி அடைந்த ஒருவர் தமது எதிரிகள் மீது எதனையும் எல்லாவற்றையும் வீசுவார். நமது அமைச்சர்கள் எவ்வளவு மேலோட்டமானவர்கள், பொறுப்பற்றவர்கள் என்பதை அவை தெளிவாகக் காட்டுகின்றன.

 

TAGS: