பிரதமர் நஜிப் 11 ஆம் எண்ணை விரும்புவது தெளிவாகியிருப்பதால் நாடு வரும் நவம்பரில் 13 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பக்கத்தான் ரக்யாட்டின் செயலாளர்கள் கூட்டம் கருதுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து பக்கத்தான் தயாராக இருந்து வருகிறது. இப்போது அதன் தயார் நிலை 100 விழுக்காடாகும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.
“நவம்பரில் பாரிசான் நேசனல் தேர்தலை நடத்தினால் அது மகத்தான வெற்றி பெறும் என்று பொருள்படாது. வரலாறு இதனை நிரூபித்துள்ளது”, என்றாரவர்.
அக்கூட்டத்தில் டாக்டர் முகமட் ஹத்தா ரமலி, டிஎபியின் தெரசா கோ மற்றும் அந்தோனி லோக் ஆகியோருடன் பிகேஆரின் உதவித் தலைவர்கள் நுருல் இஸ்ஸா அன்வாரும், சுவா தியன் சாங்கும் இருந்தனர்.