எம்ஆர்டி குத்தகைகளில் நஜிப்-பின் ‘வேடிக்கையான வியாபாரம்’

“சையட் அலி, நீங்கள் ஜார்ஜ் கெண்ட் அல்ல. நீங்கள் தண்ணீர் மீட்டர் தொழிலில் இல்லை. அதனால் எம்ஆர்டி போன்ற பெரிய பேரங்களைப் பெறுவதற்கு உங்களுக்குத்  தகுதி இல்லை.”

எம்ஆர்டி குத்தகைகள் தொடர்பில் மலாய் அமைப்பு நஜிப்பை குறை கூறுகிறது

ஒடின்: மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட் அலி அல்அத்தாஸ் அவர்களே, தெராஜு(Unit Peneraju Agenda Bumiputera) எம்ஆர்டி குத்தகைகளில் 47 விழுக்காடு “இந்த மண்ணின் இளவரசர்களுக்கு” கிடைத்துள்ளதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கூறிக் கொண்டது.

தண்ணீர் மீட்டர் போன்ற கருவிகளை தயாரிப்பதற்கு உங்கள் சங்கத்தில் உள்ள யாருக்கும் தகுதி இல்லாமலும் இருக்கலாம்.

பிரதமர் தமது ‘வேடிக்கையான வியாபாரத்தை’ தொடர்ந்தால் எதிர்கால தலைமுறையினர் அரசாங்கத்தின் மீது ஆத்திரமடையக் கூடும் என நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். அப்படிச் சொல்வது இப்போதைய தலைமுறையினரும் சங்கத் தலைவராக இருக்கும் நீங்களும் உண்மையில் விவேகமானவர்கள் இல்லல என  நான் எண்ணுகிறேன்.

ஸ்விபெண்டர்: நிச்சயமாக சையட் அலி பல ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறார். அரசிடமிருந்து பெரிய பேரங்களைப் பெறுவதற்கு சில முன் நிபந்தனைகள் உள்ளன.

முதலாவதாக நீங்கள் அம்னோபுத்ராவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக நீங்கள் அம்னோவில் சரியான முகாமில் இருக்க வேண்டும் அல்லது குறைந்தது அரசியல் ரீதியில் நல்ல தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். மூன்றாவதாக நீங்கள் மலாய்க்காரராக இருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அரசியலமைப்பு ரீதியில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அவை இல்லை என்றால் மில்லியன் கணக்கான மலேசியர்களைப் போன்று நீங்களும் வாழ்வதற்கு வருமானம் தேடும் இன்னொரு மலாய்க்காரர்தான். அம்னோ, அம்னோ மலாய்க்காரர்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும். சாதாரண மலாய்க்காரர்களை அல்ல. சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகளாகியும் அதனை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளா விட்டால் ஒரு போதும் உணரப் போவதில்லை.

பார்வையாளன்: 1957ம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த போது அந்த  நேரத்தில் பின் தங்கியிருந்த சுதேசி மலாய்க்காரர்களுக்கு மற்ற மலாயர்களுக்கு இணையாக முன்னேறுவதற்கு 15 ஆண்டுகளுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

ஆனால்  இந்திய வம்சாவளி ( டாக்டர் மகாதீர் முகமட், அவரது பிள்ளைகள்), அரபு வம்சாவளி (சையட் ஹமீட் அல்பார்), சீன வம்சாவளியினர் (அப்துல்லா அகமட் படாவி, அவரது பிள்ளைகள்) மற்றும் இதர வம்சாவளிகளை சேர்ந்த சுதேசி அல்லாத மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் என்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட மேலோட்டமான அரசமைப்பு விளக்கத்தைப் பயன்படுத்தி தங்களை மலாய்க்காரர்களாக வகைப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து உண்மையிலேயே பின் தங்கியுள்ள சுதேசி மலாய்க்காரர்களுக்கான சலுகைகளை அவர்கள் அனுபவித்தனர்.

இது அவர்களுடைய சந்தர்ப்பவாத, பேராசையான, ஈவிரக்கமற்ற, சுயநலப் போக்கை தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் உண்மையில் ஏழையாகவும் பின் தங்கியும் உள்ள மலாய்க்காரர்களை நோக்கமாகக் கொண்ட சலுகைகளை தாங்கள் எடுத்துக் கொள்வது பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

அந்த ஊழல் மலிந்த அரசமைப்பு ரீதியில் மலாய்க்காரர்களான அவர்கள் நாட்டை முறைகேடாக நிர்வாகம் செய்யாமல் இருந்தால் மலேசியா இன்னேரம் சிங்கப்பூர், தைவான், தென் கொரியா ஆகியவற்றுக்கு இணையாகத் திகழ்ந்திருக்க முடியும்.

அம்னோ எதிர்ப்பாளன்: அரசாங்கக் குத்தகைகள் வழங்கப்படும் போது இன விவகாரத்தை நாம் ஏன் எழுப்ப வேண்டும் ?

இந்த நாட்டின் நன்மைக்காக அவை திறந்த டெண்டர் முறையிலும் போட்டி அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும். சிறந்த டெண்டர் வெற்றி பெறட்டும். அவ்வளவுதானே.

அதனைச் சொல்வதால் அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கப் பகுதியை நிர்மாணிக்கும் குத்தகை கொடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் கெண்ட-டை நான் ஆதரிப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. – அது சிறந்த தேர்வு அல்ல என்பது நிச்சயம்.

அபாஸிர்: சையட் அலிக்கும் மலாய் வர்த்தக சங்கத்துக்கும் ஒர் அறிவுரை, நீங்கள் ஜார்ஜ் கெண்ட் அல்ல. நீங்கள் தண்ணீர் மீட்டர் தொழிலில் இல்லை. அதனால் எம்ஆர்டி போன்ற பெரிய பேரங்களைப் பெறுவதற்கு உங்களுக்குத்  தகுதி இல்லை.

‘சிறப்பு நிகழ்வுகளுக்கான உடைகள்’ அம்னோ அரசியல் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கமாகும்.  பெர்க்காசா, அம்னோபுத்ரா, புத்ரி, வனிதா ஆகியவற்றுடன் தொடபுடைய சீருடை தயாரிப்பாளர்களுக்கு அவற்றுக்கான குத்தகை வழங்கப்படும்.

எஸ்எம்சி: பிஎன் அரசாங்கம் 47 விழுக்காடு குத்தகைகளை பூமிபுத்ராக்களுக்கு வழங்கியது உண்மைதான். ஆனால் நீங்கள் அதனை நுட்பமாக வாசிக்க வேண்டும் என்பதை அவர் உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டார்.

எந்த இன வம்சாவளியாக இருந்தாலும் அவரது சேவகர்களே பூமிக்-களாக வகைப்படுத்தப்படுவர் என்பதே அந்த நுட்பமாகும். துரதிர்ஷ்ட வசமாக மலாய் வர்த்தக சங்கத்துக்கு அந்த சாதாரண நியாயம் கூடத் தெரியவில்லை.

அடையாளம் இல்லாதவன்_3e21: துவான் சையட் இந்த விஷயத்தில் நான் உங்களை ஆதரிக்கிறேன். நஜிப் இது போன்ற பல “வேடிக்கையான வியாபாரங்களை” நடத்தியுள்ளது எல்லோருக்கும் தெரியும். அதனால் பூமிபுத்ராக்கள் தோல்வி கண்டுள்ளனர். நமது பிள்ளைகளுடைய எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் இந்த விஷயத்தை நல்ல நேரத்தில் எழுப்பியுள்ளீர்கள்.

JSTOM: அந்த ‘வேடிக்கையான வியாபாரம்’ வழக்கமான அம்னோ நடவடிக்கை முறையாகும். ஆகவே உண்மையான குத்தகையாளர்கள் அந்த “தகுதி இல்லாத தரகர்களிடமிருந்து” குத்தகைகளைப் பெற வேண்டும். அப்போது அவற்றின் விலை உயர்த்தப்படும்.

 

TAGS: