““இது போன்ற நடவடிக்கைகள் ஆட்சி மாற்றமே ஒரே தீர்வு என்ற எண்ணத்தை வலுப்படுத்துகின்றன”
அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது
ஜேடென் வோங்: நீங்கள் இறுதியில் உங்கள் பணியைத் தொடங்கி விட்டீர்கள். பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு ஈமச் சடங்குகளை நடத்திய பெர்க்காசா உறுப்பினர்களை என்ன செய்யப் போகின்றீர்கள் ?
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் ‘குதத்தைக் காட்டி ஆடிய’ முன்னாள் இராணுவ வீரர்களை என்ன செய்யப் போகிறீர்கள் ? அண்மையில் அன்வார் இப்ராஹிம் உரையாற்றுவதைத் தடுக்க முயன்ற பெர்க்காசா உறுப்பினர்களை என்ன செய்யப் போகிறீர்கள் ?
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு உங்களிடம் விளக்கம் ஏதும் உள்ளதா ? அந்த சம்பவங்களும் அருவறுப்பான சம்பவமும் ஒரே சட்டங்களின் கீழ்தானே வருகின்றன ?
அர்ச்சன்: ‘ஒளிமயமான எதிர்காலம்’, ‘அது பொது நலனுக்கு உதவாது’ போன்ற வாதங்களைப் பயன்படுத்தி அந்த மாணவரை விட்டு விடலாம்.
காண்டர்பிரிகென்: மரியாதைக் குறைவாக அல்லது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அதனைக் கூறலாம். போலீஸ் நடவடிக்கை தேவைப்படும் அளவுக்கு அது பெரிய குற்றமல்ல.
X123581321: நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் பள்ளிவாசலுக்குள் இருக்கிறார் எனத் தெரிந்தும் கற்களையும் காலணிகளையும் வீசிய குண்டர்கள் என்ன செய்வது ? அமைதியை சீர்குலைத்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்களா ?
விஜார்ஜ்மை: நாட்டின் சில தலைவர்களுக்கு எதிராக மலாய் வலச்சாரியினர் நடத்திய அருவறுக்கத்தக்க நடவடிக்கைகள் மீது போலீசார் செயல்பட்டிருந்தால் அந்த சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.
NuckinFuts: பாசத்துக்குரிய நமது தலைவர்களை போற்ற வேண்டும் என்ற பாடத்தை அது அந்த மாணவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ரோஸ்மா மான்சோர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோரது படங்களுக்கு முழு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.
அவை தேசியக் கருவூலங்கள். அவை வீடுகளிலும் பணிமனைகளிலும் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட வேண்டும். அருவறுக்கத்தக்க செயல்களில் அனுபவமிக்க முன்னாள் இராணுவ வீரர்களே ஈடுபட முடியும். நாட்டின் இளைஞர்கள் அல்ல.
மாற்றம்: அரச மலேசியப் போலீஸ் படை தான் தேர்வு செய்யும் நேரத்தில் மிகவும் திறமையாக இயங்குவது எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. ஆனால் அந்த வேகம் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் அல்லது அனுதாபிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் காட்டப்படுவதுதான் வருத்தமாக உள்ளது.
அர்மகடோன்: இந்த இடத்தில் ஆடையில்லாத ( bare ) என்ற சொல் முக்கியமானது. அம்பிகா வீட்டுக்கு முன்னால் முன்னாள் இராணுவத்தினர் செய்ததைப் போன்று குதம் மூடப்பட்டிருந்தால் அது ஒகே. சட்டம் ‘நீக்குப் போக்கானது’ என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியும்.
ஜோசப் லீ: கோ சூ கூன் முதலமைச்சராக இருந்த போது அவரது படத்தைக் கிழித்து மிதித்த குண்டர்களை கைது செய்வது பற்றிப் போலீசார் ஒன்றுமே சொல்லவில்லை.
அடையாளம் இல்லாதவன்#72737246: நாடு எந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கு இது உதவும். மாற்றம் மட்டுமே ஒரே வழி.